Wednesday, September 15, 2010

தஞ்சைப் பெரிய கோவில் - நாம் செய்ய வேண்டியது



அடுத்த நொடி இந்த உலகம் தரப்போகின்ற அற்புதங்களும், ஆச்சரியங்களும் ஏராளம். அது போலவே வரலாறும் நமக்காக பல அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் ஒளித்து வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட வரலாற்று அதிசயம் தான் "தஞ்சைப்  பெரிய கோவில்".  
ஆயிரம் ஆண்டுகளாக (1010 - 2010 ) பல்வேறு விதமான படையெடுப்புகளுக்கு மத்தியில் நிலைத்து நின்று தமிழனின் பெருமையை பறைசாற்றி வருகிறது.

கற்களால் கோவில் கட்ட சாத்தியமே இல்லாத ஒரு இடத்தில் இவ்வளவு பெரிய கோவிலை கற்களைக்  கொண்டு கட்டிய ராஜராஜசோழனின் திறமையை நாம் என்னவென்று சொல்வது.இன்னும் நமக்குத்  தெரியாத எவ்வளோவோ அற்புதங்களும் , ஆச்சரியங்களும் கோவிலினுள் மறைந்துள்ளன. அவை வெளிவரும்வரை , இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் , இந்த கோவில் நமக்கு அதிசயம் தான்.

 ராஜராஜசோழன் நிகழ்த்திய அற்புதத்தில் ஒன்று  தான் இந்தக் கோவில். கலைக்காகவும் , மொழிக்காகவும் , நாட்டுக்காகவும் அவர்  ஆற்றிய பங்கு மிகப்பெரியது .இவ்வாறு,  ஒரு தனிப்பெரும்  தலைவனாக வாழ்ந்து காட்டியவர் , ராஜராஜசோழன். ஆனால்,  இன்று அவருக்கு  ஒரு நினைவு மண்டபம் கூட இல்லை.  

ஆயிரமாவது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியது.

  1. ராஜராஜசோழன் நினைவு மண்டபம் கட்ட வேண்டும்.
  2. கோவிலுக்குச் சொந்தமான கலைப்பொருட்கள் வடமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ளன. அவற்றை மீட்க வேண்டும். 
  3. கடைசியாக   தஞ்சையை   ஆண்ட   சரபோஜி மன்னனின் வாரிசுகளுக்கு  இருக்கும்  உரிமையை மீட்டுச் சோழனின் வாரிசுகளுக்குத் தர வேண்டும்.  
 இவற்றைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் , தஞ்சைப்  பெரிய கோவில் - நாம் செய்ய வேண்டியது பெரிய கோவிலையும் , ராஜராஜசோழனின் புகழையும் யாராலும் அழிக்க முடியாது ( காலத்தை தவிர ). 

ஊரே கொண்டாடிக்   களிக்கவேண்டிய ஒரு விழா அமைதியாக நடைபெறப் போகிறது.உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு செய்த ஆர்ப்பாட்டத்தில்  ஒரு  துளியை கூடஇதற்குச் செய்யவில்லை .
விழாவுக்கு என்று தனிப்பாடல் உருவாக்கப்படவில்லை . விளம்பரம் இல்லை . 
 காரணம் என்னவென்று யார் அறிவாரோ? 


 அவர்கள் பாடல் உருவாக்கவில்லை என்றால் என்ன, நமக்குத்தான்   ராஜராஜசோழன் படத்தில் இடம்பெற்ற  "தஞ்சைப்  பெரிய கோவில் - நாம் செய்ய வேண்டியது பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே" பாடல் இருக்கின்றதே , கேட்டு மகிழ்வோமாக (A .P .நாகராஜன் வாழ்க) .

தஞ்சைப் பெரிய கோவில் வாழ்க !

ராஜராஜசோழன் வாழ்க !

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms