Thursday, June 9, 2011

எந்தக் குளியல் சோப் நல்லது ?

எவ்வளவு சிக்கலான விசயங்களுக்கும் தீர்வு கண்டுபிடித்துவிடும் நமக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரிவதில்லை . அந்த அளவிற்கு வணிக நிறுவனங்களால் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளோம் . ஒருத்தன் என்னடனா " எங்கள் சோப் உங்களை வெள்ளையாக்கும் " என்கிறான் . இன்னொருத்தன் " எங்கள் சோப்பை 99.9 % மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் " என்கிறான் ( அப்ப 0.1% மருத்துவர்கள் எந்த சோப்பைப்  பரிந்துரைப்பார்கள் ?) . இப்படிப்  பலவிதமாக , பலவிதமான சோப்புகளை வாங்கச்சொல்லி நம்மை இம்சை செய்கிறார்கள் . உண்மையில் எது நல்ல சோப் ?


TOILET SOAP :

முதலில் நீங்கள் பயன்படுத்துவது சோப் தானா என்று பாருங்கள் . ஆமாம் , சோப்பின் மேலுறையில் " Toilet Soap "என்று போட்டிருக்க வேண்டும் .  நிறைய சோப்களில் " Bathing Bar " என்றோ அல்லது வேறு பெயரோ இருக்கும் . அவை நல்ல சோப் அல்ல . Bathing Bar என்று போட்டிருக்கும் சோப் தான் அதிகம் விளம்பரப் படுத்தப்படுகிறது . 

TFM :

இரண்டாவதாக  நாம் பார்க்க வேண்டியது TFM % அதாவது  "Total Fatty Matter " . எல்லா Toilet சோப்களிலும் TFM % இருக்கும் . Bathing Bar என்று போட்டிருக்கும் சோப்களில் TFM % இருந்தாலும் இருக்கும் , இல்லாமலும் இருக்கும் . TFM % அதிகமாக இருக்கும் சோப் தான் நமது தோலுக்கு நல்லது . TFM % யை வைத்து சோப் மூன்று வகையாக பிரிக்கப் படுகிறது . TFM % , 75 முதல்  80 வரை இருந்தால் அது Grade 1 சோப் என்று சோப்பின் மேலுறையில்  குறிப்பிடப்படுகிறது . இந்த வகையான சோப்கள் எல்லோருக்கும் நல்லது . TFM % , 70 முதல் 75 வரை இருந்தால் Grade 2 எனவும் 65 முதல் 70 வரை இருந்தால் Grade 2 எனவும் குறிப்பிடப்படுகிறது . இந்த வகையான சோப்கள் எல்லோருக்கும் பொருந்தாது . ஒரு சிலருக்கு பொருந்தும் ஒரு சிலருக்கு பொருந்தாது . 

Grade 2 மற்றும் Grade 3 சோப்களே அதிகம் விளம்பரப் படுத்தப்படுகின்றன . Grade 1 சோப் அதிகம் விளம்பரப் படுத்தப்படுவதில்லை . அதனால், சோப் வாங்கும் போது இந்த இரண்டு விசயங்களையும் ( Toilet Soap , TFM %) கவனத்தில் கொள்ளவும் . 

துணி துவைக்கும் சோப் :

துணி துவைக்கும் சோப்பை பொருத்தவரை எந்த சோப் துணி துவைக்கும் கையை அரிக்காமல் இருக்கிறதோ அதுவே நல்ல சோப் . உப்புத் தண்ணீரிலும் அழுக்கை நீக்க வேண்டும் .  

சோப்பின் வரலாறு :

கி .மு .2800 ஆம் வருடத்திலேயே சோப் போன்ற பொருள் பாபிலோனியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது . ஆனால் , அது குளியலுக்குப் பயன்படுத்தப்படவில்லை . கி .மு 1550 இல் எகிப்தில் சோப் போன்ற பொருளை தயாரித்து தினமும் குளியலுக்கு பயன்படுத்தியுள்ளனர் . இப்படியாக தொடர்ந்த சோப்பின் பயணம் வேகம் பிடித்தது 19 மற்றும் 20 நூற்றாண்டுகளில் தான் . முதலில் கைகளால் தயாரிக்கப்பட்ட சோப் பிறகு இயந்திரங்களால் தயாரிக்கப்பட்டது . 

சோப் என்பது :
                          
சோப் என்பது ஒரு வகை உப்பு தான் . கொழுப்பும் (Fat) , காரமும் (  Alkaline ) சேர்ந்த கலவையாகும் . சோப்புக்கான சூத்திரம் ,

              Fatty acid (oil) + Base (lye) = "A Salt" (soap)

                 கொழுப்பு + காரம் =  உப்பு (சோப் )

சோப் தயாரிப்பதற்கு தாவர மற்றும் விலங்கு கொழுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன . 

சோப்பின் வணிக சந்தை :

இன்று சோப்பின் வணிக சந்தை மிகப்பெரியது . வணிக நிறுவங்களுக்கு, சோப் விற்பனை மூலம் கோடிக்கணக்கான ரூபாய் இலாபம் கிடைக்கிறது . சந்தையில் பல்வேறு விதமான நிறுவங்களின் பல்வேறு விதமான சோப்கள் ( Ayurvedic Soap , Antiseptic Soap ,etc) கிடைக்கின்றன . எப்படிப் பார்த்தாலும் சோப்பும் ஒரு வேதியல் பொருள் தானே , இயற்கையானது அல்லவே .  பாதிப்புகள் குறைவான சோப் குழந்தைகள் சோப் ( Baby Soap ) தான் . ஒரு சிலர் இதையும் பயன்படுத்துகின்றனர் . African anti-ageing beauty soap என்று ஒன்று உள்ளதாம் . இதைப் பயன்படுத்தினால் வயதாவதைக் குறைக்குமாம் . என்ன கொடுமை இது ?  நாம் எதற்காக கவலைப்படுகிறோமோ அது சார்ந்த பொருள் (முக அழகு முதல் மூட்டுவலி வரை )  நம் தலையில் கட்டப்படுகிறது .  

சோப் பற்றியும் ஒரு கட்டுரையா ?! 

மேலும் படிக்க :



.................................

3 comments:

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

Thanks.

மதுரைக்காரன் said...

Good information...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms