Pages

Saturday, May 7, 2011

செங்கொன்றை மலர் - Mayflower

மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த அழகிய மனதை கொள்ளைகொள்ளும்  மரத்தை பார்க்காமல் உங்களால் இருக்கவே முடியாது . இந்த மரம் நம் நாட்டின் பெருவாரியான இடங்களில் காணப்படுகிறது . நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது இயந்திர வாழ்க்கைக்கு மத்தியில் கொஞ்ச நேரம் நின்று ரசிக்க வேண்டியது தான் .



இந்த மலர்   செம்மயிற்கொன்றை என்றும் அழைக்கப்படுகிறது . இதன் அறிவியல் பெயர் - Delonix regia . வெப்பவலயப் பகுதிகளைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இவ்வளவு அடர்ந்த ஆரஞ்சு கலந்த  சிவப்பு நிறத்தை நாம் வேறு இடங்களில் காண்பது அரிது . பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல உள்ளது . இயற்கையின் படைப்பே தனி தான் .

மே மாதங்களில் மட்டும்  அதிகம் பூப்பதால் இந்த மரத்திற்கு Mayflower Tree என்ற பெயர் வந்தது . இந்த அழகிய மே மாதத்தில் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திச்  செங்கொன்றை மலர்களை மட்டுமல்ல வாழ்க்கையையும் ரசியுங்கள் .
இயற்கையைக் கொண்டாடுங்கள் !
.......................................

2 comments:

  1. இந்தப்பூவை குல்மொஹர் (Gulmohar) ன்னு ஹிந்தியில் சொல்றாங்க. இதுலேGul என்றால் மலர் mohar என்றால் மயில் என்று பொருள். அப்போ மயில்கொன்றைபூ என்பதும் இதுதான் போல.

    மலர்கள் பூக்கும் சீசனில் தீ பிடிச்சமாதிரி இருக்குன்னுட்டு இதுக்கு ஃபயர் ஆஃப் த ஃபாரெஸ்ட்ன்னும் ஒரு பெயர் இருக்கு.

    இப்போ நான் இருக்கும் இந்த ஊரில் எங்கே பார்த்தாலும் தீ!!!!! Gகொல்லுன்னு பூத்துக்கிடக்கு:-))))

    ReplyDelete
  2. சென்னையில் நிறைய இடங்களில் இந்த மரங்கள் பூத்து குலுங்குவதை தற்போது காணலாம்

    ReplyDelete