Pages

Sunday, October 21, 2012

பட்டுவண்ண ரோசாவாம் ...!

தமிழ் திரையிசையின் மாபெரும் ஆளுமைகளான எஸ்.ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் குரல்களில் தனித்தனியாக ஒலித்த சிறந்த பாடலிது . 1978 ஆம் ஆண்டு சங்கர் கணேஷின் சிறப்பான இசையமைப்பில் வெளிவந்த " கன்னிப்பருவத்திலே " படத்தில் இப்பாடல் இடம் பெற்றது . வேறு ஏதாவது படத்தில் இப்படி ஒரே பாடலை இவர்கள் இருவரும் தனித்தனியே பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை . எஸ்.ஜானகியும் ,மலேசியா வாசுதேவனும் எவ்வளவு அற்புதமான உயிரோட்டமான பாடகர்கள் என்பதை அறிய இந்த ஒரு பாடலே போதும் . இந்தக்குரல்கள் நம்முள் ஏற்படுத்தும் உணர்வுகள் அலாதியானது ;நம்மை மெய்மறக்கச் செய்வது . புலமைப்பித்தனின் பாடல் வரிகள் பாடலை மேலும் அழகாக்குகின்றன . மனைவி கணவன் மீதும் ,கணவன் மனைவி மீதும் வைத்திருக்கும் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த எழிலான பாடல் . இந்தப்பாடலில் நடிகை வடிவுக்கரசி வெளிப்படுத்தும்  முகபாவங்கள் அவ்வளவு அருமை . தமிழ் சினிமா இவரது நடிப்பை அதிகம் பயன்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது .

எஸ் .ஜானகியின் குரலில் :





மலேசியா வாசுதேவன் குரலில் :



அழிவற்ற குரல்கள் ....

மேலும் படிக்க :

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

ஆக்காட்டி ஆக்காட்டி !

ஜோடிப் பாடலும் பிரிவுப் பாடலும் !

....................................................................................................................................................

1 comment:

  1. இரண்டுமே மிக நல்ல பாடல்கள்... நன்றி...

    கொடுக்கின்ற பாத்திரத்தை (முக்கியமாக அளவிற்கு மீறாமல்...) சிறப்பாக செய்பவர்...

    /// தமிழ் சினிமா இவரது நடிப்பை அதிகம் பயன்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது... ///

    நீங்கள் சொல்வது உண்மை... இவரைப் போல பல பேர்கள்...

    ReplyDelete