2022ம் ஆண்டு, இந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான 'விட்னஸ்' திரைப்படத்துடன் நிறைவு பெறுகிறது.
இந்தாண்டு வெளிவந்த நிறைய தமிழ்த் திரைப்படங்கள் நம்பிக்கை அளிக்கின்றன. நாயகத்துதிபாடல்களை மட்டுமே முன்வைக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. பல்வேறு விதமான அரசியல்களை பேசும் திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. பொறுப்புணர்வுடன் திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் இது அரிதான விசயம். இந்த ஆண்டில் நிறைய வெளிவந்திருக்கின்றன. OTT-ம் ஒரு காரணமாக இருப்பதை மறுக்கமுடியாது. குறிப்பாக SonyLiv தளத்தில் நிறைய குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ( கார்கி, அனல் மேலே பனித்துளி, கடைசி விவசாயி, சேத்துமான், இப்போது விட்னஸ்) இருக்கின்றன.
'விட்னஸ்' நாம் பேச மறந்த, பேச மறுத்த விசயத்தைப் பேசி இருக்கிறது. சாதிக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு திரைப்படம் முழுவதும் விவரிக்கப்படுகிறது. அதிகாரம், எப்போதும் சட்டத்தின் பக்கம் நிற்பதற்குப் பதிலாக சாதியின் பக்கமே நிற்கிறது. எளிய மக்களை அடக்கி ஒடுக்கவே அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது.
தேர்ந்தெடுத்த கதாப்பாத்திரங்களும், காட்சிப்படுத்திய விதமும் மிகவும் பிடித்திருந்தது. செங்கொடிகளை திரையில் காண்பித்ததும், தீவிர இடதுசாரி தோழர்களின் வாழ்வை செல்வா தோழரின் கதாப்பாத்திரம் வாயிலாக விவரித்ததும் முக்கியமானது. மக்களின் பிரச்சனைகளுக்காக இன்றும் ஓயாமல் குரல் கொடுப்பவர்கள் இடதுசாரி தோழர்கள்தான், ஓட்டரசியல்வாதிகள் அல்ல.
இவ்வளவு சிக்கலான விசயத்தை தேர்ந்த கலைவடிவமாக கொடுத்த இயக்குநர் தீபக்கிற்கும் , படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் !
இத்திரைப்படத்தைப் பார்க்கும் எவரையும் ஏமாற்றாது.
மேலும் படிக்க :
No comments:
Post a Comment