Pages

Tuesday, June 23, 2026

Sukhamano Sukhamann - அழகோவியம் ♥️


மலையாள திரையுலகிலிருந்து மற்றுமொரு மனிதம் பேசும் படைப்பு. எப்போதாவது கிடைக்கும் தனிமை என்பது இனிமை. துணைக்கு உறவோ, நட்போ இல்லாத தனிமை மிகக் கொடுமையானது. அந்தத் தனிமையைச் சுற்றியே இத்திரைப்படம் நகர்கிறது. 


சக மனிதர்களை தனித்து விடாத வழக்கம் இன்றும் பழங்குடியின மக்களிடையே இருக்கிறது. நாகரீக மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நம்மிடம் தான் இல்லை. ஏதோ ஒரு காரணத்தால் ஏதோ ஒரு மனிதரை தனிமைப்படுத்தி அழகு பார்க்கிறோம். சந்திக்கும் மனிதர்கள் அனைவரிடமும் ஆதாயத்தை தேடும் வழக்கம் அதிகரித்து இருக்கிறது. ஆதாயம் கிடைக்காது என தெரிந்த மனிதரை ஒதுக்கி வைத்து விடுகிறோம்.


வெவ்வேறு சூழல்களால் தனிமையைச் சந்திக்கும் மூன்று பேர்களுடைய கதைகளைத்தான் இத்திரைப்படம் பேசுகிறது. அதில் கொஞ்சம் கற்பனையை ஏற்றி சுவாரசியமாக , நகைச்சுவையைச் சேர்த்து ரசிக்கும்படி எடுத்திருக்கிறார்கள். 


பொதுவாகவே மலையாளத் திரைப்படங்கள் மனிதர்களின் ஆதார மனித உணர்வுகளை நுணுக்கமாக பேசுபவை. இந்தத் திரைப்படமும் அப்படியே. "இவுங்க மட்டும் எப்படி இப்படியெல்லாம் ஒரு கதைக் கருவை தேர்ந்தெடுக்கிறாங்க" என்ற ஆச்சரியம் இந்தத் திரைப்படம் பார்க்கும் போதும் தோன்றியது. 


அதிலும் Kudassanad Kanakam வரும் காட்சிகள் கலகலப்பு. போகிற போக்கில் சிரிக்க வைத்துவிட்டு போய் விடுகிறார். மொத்தத்தில் எதிர்பாராத நல்ல அனுபவம். 

இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉 

மேலும் படிக்க:

மதிலுகள் ❤️

JANA GANA MANA - பாசிச எதிர்ப்பு சினிமா !


No comments:

Post a Comment