Friday, December 30, 2011

வரவு எட்டணா செலவு பத்தணா !

1967 ஆம் ஆண்டு கே .பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான " பாமா விஜயம் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . கவிஞர் கண்ணதாசன் இந்தப்பாடலை எழுதியுள்ளார் . T.M.செளந்தர்ராஜன் , சுசீலா மற்றும் L .R .ஈஸ்வரி இந்தப்பாடலைப் பாடியுள்ளனர் . பாடல் வரிகள் இன்றைக்கும் ஓரளவு பொருந்தும் . இன்றைய நிலையில் மாதம் 8000 ரூபாய் வருமானம் வந்தால் 10000 ரூபாய் செலவு வருகிறது . ஆடம்பரத்தை துறந்து எளிய வாழ்க்கை வாழ முடிந்தால் 8000 ரூபாயே அதிகம் தான் . மாதம் ரூபாய் 3000 சம்பாதிப்பதே சாதனை என்ற நிலையில் இருக்கும் குடும்பங்களும் நம் நாட்டில் தான் இருக்கின்றன என்பதை மறந்து விட முடியுமா ? நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது ! அய்யா நிம்மதி இருக்காது ! அளவுக்கு மேலே ஆசை வந்தால் உள்ளதும் நிலைக்காது ! அம்மா உள்ளதும்...

Wednesday, December 28, 2011

2011 ம் வருடமும் சாமானியனும் !

ஒரு சாமானியனின்  கவலைகள் என்பதா ,கேள்விகள் என்பதா ,ஆதங்கம் என்பதா ,இயலாமை என்பதா அல்லது அறியாமை என்பதா தெரியவில்லை . ஆட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன . ஆனால் , அதிகார மையங்களின் பிடியிலிருந்து மக்கள் இன்னும் வெளியே வரமுடியவில்லை . பிரதமர் ,முதல்வர் போன்ற மேல் நிலை ஊழியர்களிலிருந்து அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை சாமானிய மக்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவே இருக்கின்றனர் . மக்களின் வரிப்பணம் தான் தனக்கு சோறு போடுகிறது என்ற மனநிலை அவர்களுக்கில்லை . சாமானியர்கள் மீது அதிகபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பவர்கள் காவல்துறையைச்  சேர்ந்தவர்கள் . பொய் வழக்கு ,லாக்கப் சித்திரவதை , தடியடி , துப்பாக்கிச்சூடு என்று சாமானியர்கள் மீது பாயும் அதிகாரத்தின் நீளம் அதிகம் . உலகமே அதிகார மையங்களின் கட்டுப்பாட்டிலே...

Monday, December 26, 2011

ஜம்புலிங்கமே ஜடாதரா ...!

முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது .1972 ஆண்டு வெளிவந்த " காசேதான் கடவுளடா ", AVM நிறுவனம் தயாரித்த  ஒரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் . இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஜம்புலிங்கமே ஜடாதரா.." என்ற பாடலைப் எங்கவாது பார்க்க நேரும்போது அடக்க முடியாத சிரிப்பு வந்துவிடும் . வாலியின் கவிவண்ணத்தில் பாடல் அவ்வளவு சிரிப்பு . இந்தப்பாடலை கி .வீரமணி ,கோவை சவுந்தரராஜன் மற்றும் தாராபுரம் சுந்தர் ஆகியோர் பாடியுள்ளனர் . அந்தப்பாடல் :              ( இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு பாடல் தொடங்கும் ) முடிந்தால் இந்தத் திரைப்படத்தையே முழுமையாக பாருங்கள் . அவ்வளவு சிரிப்பு ! காணொளி மேலும் படிக்க : நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி !  மெதுவான...

Saturday, December 24, 2011

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே !

பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம்  , பொதுவுடைமை கருத்துக்களை மையமாக கொண்ட பாடல்களை மட்டும் எழுதவில்லை . கற்பனை வளம் ததும்பக் கூடிய நிறைய பாடல்களை எழுதியுள்ளார் . அவற்றில் ஒரு துளி தான் இந்தப்பாடல் . நிலவை  எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக வர்ணனை செய்துள்ளனர் . இந்தப் பாடலில்  பட்டுக்கோட்டையார் , நிலவை தன் காதலியின் சகோதரியாக கற்பனை செய்து , காதலியை கேலி செய்வதுடன் நிலவையும் கேலி செய்து அற்புதமாக எழுதியுள்ளார் . 1960 ஆம் ஆண்டு வெளிவந்த " எல்லோரும் இந்நாட்டு மன்னர் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . T.M.செளந்தர்ராஜன்  , இந்தப் பாடலை சிறப்பாக பாடியுள்ளார் . அந்தப்பாடல் : பாடல் வரிகள் : என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே? (என்…) கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே _ உன்னைக் காவல்காக்கும்...

Thursday, December 22, 2011

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !

" உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல் ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ; ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு . உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் ஓடி மறைந்திடும் மடமை " என்று சொல்கிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .1960 ஆம் ஆண்டு வெளிவந்த "  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . சக மனிதர்களைச் சாராமல் யாராலும் வாழ முடியாது . நாம் சாப்பிடும் ஒரு வேளை உணவில் எத்தனையோ மனிதர்களின் பங்களிப்பு இருக்கிறது .   அந்தப் பாடல் : பாடல் வரிகள் : பெண் : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஆண் : ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு (ஒன்று…) இருவர் : உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல் ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் (ஒன்று…) பெண் : ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும் தேதியில் தோன்றும் பெருமை ஆண் : சண்டைகள் தீர்ந்தே...

Monday, December 19, 2011

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்விடங்களில்  கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்து கொண்டிருக்கும் குரல் மலேசியா வாசுதேவனுடையது .  தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாசுதேவனின் குரலும் ஜானகியின்  குரலும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன . தமிழிசையோடு கலந்துவிட்ட குரல்கள் அவை . வாசுதேவன் பாடிய உயிரோட்டமான  பாடல்கள் , நமக்கு மகிழ்ச்சியையும் ,சோகத்தையும் , மனதிற்கு இதத்தையும் ,கொண்டாட்டத்தையும் , ஆறுதலையும் ,வாழ்வதற்கான நம்பிக்கையையும் தரக்கூடியவை . மலேசியாவில் பிறந்து வளர்ந்த ஒருவருக்கு தமிழக கிராமிய பாணியிலான பாடும் முறை எப்படி வாய்த்தது ? இளையராஜா முக்கிய காரணமாக இருக்ககூடும் .வாசுதேவன் , வார்த்தை உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் . எல்லாவிதமான பாடல்களிலும் மிகத் தெளிவான வார்த்தை உச்சரிப்பு . கிராமிய பாடல்களில்...

Friday, December 16, 2011

பொறக்கும் போது பொறந்த குணம் !

மனிதன் பிறக்கும்போது பிறந்த குணங்கள் காலப்போக்கில் எப்படி மாறிவிடுகின்றன என்பதை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்தப்பாடல் மூலம் உணர்த்துகிறார் . "சக்கரவர்த்தி திருமகள் " என்ற படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடி ,MGR வாயசைப்பது போல அமைந்த பாடலிது . மக்களின் அறியாமை  இருளை நீக்குவதற்காகவே நிறையப்  பாடல்களை  எழுதியுள்ளார் , பட்டுக்கோட்டையார் . அதில் இந்தப்பாடலும் ஒன்று .  அந்தப்பாடல் :                                          திரைப்படத்தில் -  http://www.pattukkottaiyar.com/site/?p=477    பாடல் வரிகள் : உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனைக்குணம் _ காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் கெடுப்பதுவே...

Wednesday, December 14, 2011

மெதுவான எளிய வாழ்க்கை !

வாழ்க்கை எளிதானது அல்ல . ஆனால் ,எளிய வாழ்க்கை என்பது அழகானது ,ஆனந்தமானது ,அன்பானது ,நிறைவானது . ஆடம்பரமிக்க ,பரப்பான ,வேகமான வாழ்கையை நோக்கியே நாம் தள்ளப்படுகிறோம் . எலிக்கதை ஒன்று சொல்வார்கள் " ஒரு ஊருல ஆயிரக்கணக்கான எலிகள் ஒரு தெருவில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன .அந்தத் தெருவுல இருந்த வீட்டிலிருந்து ஒரு எலி எட்டிப்பார்த்து "எல்லோரும் எங்க போறீங்க " என்று கேட்டது .அதுக்கு தெருவுல போன ஒரு எலி, " எனக்குத் தெரியாது .எல்லோரும் போறாங்க நானும் போறேன் " என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஓடியது . அந்தக்கூட்டத்தில் அந்த வீட்டு எலியும் சேர்ந்து கொண்டது " . அந்த வீட்டு எலியின் மனநிலையில் தான் நாம் இருக்கிறோம் . பெரும்பாலான நேரங்களில் நம்முடைய வாழ்க்கை நம் கைகளில் இல்லை . சமூக அங்கீகாரம் தான் பெரிதாக பார்க்கப்படுகிறது .புகழ் மிக்க வாழ்க்கை எல்லோருக்கும்...

Wednesday, December 7, 2011

மனிதன் - ஒரு மாபெரும் பிரிவினைவாதி !

பூமியை அழிக்க யாராவது வேறு கிரகத்தில் இருந்து வந்தால் மட்டும் தான் பூமியர்கள் ( மனிதர்கள் ) அனைவரும் ஒன்றுபடுவார்கள் போல . அதுவரை எங்கேயும் எப்போதும் அடிதடி தான் . நாடு ,மாநிலம் ,மாவட்டம் ,ஊர்,கிராமம் ,தெரு ,சந்து ,பக்கத்து வீடு , குடும்பம் என்று பிரிவினைகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவது தான் ஒரு நாகரிக சமூகத்தின் வளர்ச்சியா ? ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எதிரி நாடு உள்ளது . நான் இந்த நாட்டுக்காரன் ,நான் அந்த நாட்டுக்காரன் என்று ஓயாத பெருமை வேறு . நாட்டுக்காரன் பெருமையெல்லாம் மாநிலம் என்று வரும்போது உடைந்து விடுகிறது . நான் இந்த மாநிலத்துக்காரன் , நான் இந்த மாவட்டத்துக்காரன் ,நான் இந்த ஊர்க்காரன் , நான் இந்த தெருக்காரன் ,நான் இந்த குடும்பத்துக்காரன் என்று பெருமை பேசி சதா சண்டைக்கு போவது தான் நம் வேலையா ? இவற்றையெல்லாம் விட பெரிய பிரிவினைகள்...

Thursday, December 1, 2011

உண்மையான கொண்டாட்டம் !

குழந்தைகளின் உலகம் மிகவும் அழகானது ,மிகவும் அற்புதமானது ,மிகவும் ஆனந்தமானது ,மிகவும் கொண்டாட்டமானது . இதை உணராத மனநிலையில் நாம் இருக்கிறோம் . குழந்தைகளின் தினசரி வாழ்வில் நிறைய அன்பும் ,நிறைய பிணைப்பும் , கொஞ்சம் சண்டையும் கலந்திருக்கின்றன . குழந்தைகளை குழந்தைகளாக வளர நாம் அனுமதிப்பதே இல்லை . நான்கு வயதிற்குள் , தனக்கு வேண்டியதை தானே செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் . அறிவியல் என்ன சொல்கிறது என்றால் , குழந்தையின் 14 வயது வரை நம் கைகள் அவர்களைத் தொட்டுக்கொண்டே இருக்க வேண்டும் . அப்போது தான் அந்தக் குழந்தை தனக்காக இவர் இருக்கிறார் என்று உணரும் .இல்லாவிட்டால்  தனக்காக யாரும் இல்லை என்று உணர்த்து அதற்கேற்றவாறு  நடந்து கொள்ளும் . அப்புறம் " எம்புள்ளை என் மேல பாசமாவே இல்லை " னு புலம்புவதால் ஒன்றும் நடக்காது . " தொடுதல்...

மட்டமான பேச்சு !

மட்டமான பேச்சைப் பேசுவதில் என்றும் முதலிடம் வகிப்பது நம் அரசியல்வாதிகள் தான் .எந்த மாதிரியான பிரச்சனையாக இருந்தாலும் அவர்களின் பேச்சு மட்டமானதாகவே உள்ளது . சில விதிவிலக்குகள் இருக்கலாம் .ஏதாவது ஒரு அரசியல்வாதியை எடுத்துக்கொள்ளுங்கள் , அவர் அரசியலுக்கு வந்தது முதல் இன்று வரை பேசிய பேச்சைக் கேட்டுப் பாருங்கள் . அவரது  பேச்சு எதற்கும் பயன்படாது போனது புரியும் . அரசியல்வாதிகள் தவிர்த்து , நம்மைச் சுற்றி எப்போதும் வெட்டிப்பேச்சு பேச ஆட்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள் . அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . இல்லாவிட்டால்  " மட்டமான பேச்சு அவர்கள் வாயைக் கெடுப்பதுடன் ,நம் காதையும் கெடுக்கும் " என்று சொல்கிறார் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . 1965 ஆம் ஆண்டு வெளிவந்த " மகனே கேள் " என்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடலை எழுதியுள்ளார்...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms