
" மாற்றம் ஒன்றே மாறாதது " என்பது பொது நியதி .ஆனால் ,அது ஒன்றே ஒன்றுக்கு
மட்டும் பொருந்தாது .அது நம் கல்வி முறை . அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் ,
தொழில்நுட்பப் புரட்சியாலும் உலகம் எவ்வளவோ மாறுதலுக்கு உட்பட்ட பிறகும்
நம் இந்திய கல்வி முறை மாற்றம் இல்லாமல் தொடர்கிறது . மனப்பாடம் செய்யும்
திறமையை மட்டுமே நம் கல்வி முறை தொடர்ந்து வளர்த்து வருகிறது .எல் .கே .ஜி .
படித்தாலும் இன்ஜினியரிங் படித்தாலும் மனப்பாடம் செய்யத் தெரிந்தால்
போதும் நீங்கள் பாஸ் . மற்ற எதுவும் தேவையில்லை . உலகம் குறித்தோ , இயற்கை
குறித்தோ , அரசியல் குறித்தோ , மனித இனத்தின் வரலாறு குறித்தோ ,தன்னைச்
சுற்றி வாழும் மனிதர்கள் குறித்தோ எந்தப் புரிதல்களும் நம் கல்வி முறையால்
ஏற்படுத்தப் படுவதில்லை .
அழகான , பகட்டான , அதிக மதிப்பெண் பெற்றுத் தரும் ஒரு பள்ளியில் தன்...