
தமிழ் திரையிசையின் மாபெரும் ஆளுமைகளான எஸ்.ஜானகி மற்றும் மலேசியா
வாசுதேவன் குரல்களில் தனித்தனியாக ஒலித்த சிறந்த பாடலிது . 1978 ஆம் ஆண்டு
சங்கர் கணேஷின் சிறப்பான இசையமைப்பில் வெளிவந்த " கன்னிப்பருவத்திலே " படத்தில்
இப்பாடல் இடம் பெற்றது . வேறு ஏதாவது படத்தில் இப்படி ஒரே பாடலை இவர்கள்
இருவரும் தனித்தனியே பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை
. எஸ்.ஜானகியும் ,மலேசியா வாசுதேவனும் எவ்வளவு அற்புதமான உயிரோட்டமான
பாடகர்கள் என்பதை அறிய இந்த ஒரு பாடலே போதும் . இந்தக்குரல்கள் நம்முள்
ஏற்படுத்தும் உணர்வுகள் அலாதியானது ;நம்மை மெய்மறக்கச் செய்வது .
புலமைப்பித்தனின் பாடல் வரிகள் பாடலை மேலும் அழகாக்குகின்றன . மனைவி கணவன்
மீதும் ,கணவன் மனைவி மீதும் வைத்திருக்கும் எல்லையற்ற அன்பை
வெளிப்படுத்தும் வகையில் அமைந்த எழிலான பாடல் . இந்தப்பாடலில் நடிகை...