
படிக்காதவர்களை விட படித்தவர்கள் அதிகமான ஜாதி வெறியுடன் இருக்கும்
காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் . ஜாதியும் அரசியலும் பிரிக்க முடியாத
நிலையில் இருக்கின்றன . ஜாதிகளை களைய வேண்டிய கல்விக்கூடங்கள்,தங்கள்
பெயர்களில் ஜாதிகளின் பெயரைத் தாங்கி இருக்கின்றன . மனிதன், எப்போதுமே
தனக்கு கீழ் அடிமை நிலையில் யாரவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறான் .
அதிகாரத்தின் அடிமையாகவும் ,விளம்பரங்களின் அடிமையாகவும் இருப்பதைப்
பற்றியெல்லாம் அவனுக்கு கவலைகள் இல்லை . கல்வியின் மூலமே ஜாதியம் குறையும் .
எப்போது ? பாடத்திற்கு வெளியேயும் எப்போது படிக்கிறார்களோ ?ஜாதியத்திற்கு
எதிராக எப்போது கேள்விகள் கேட்கிறார்களோ ? அப்போது .
1964 ஆம் ஆண்டு வெளிவந்த "பணக்கார குடும்பம் " என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது...