
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்கள் ,சதிகாரர்கள் . பண்ட மாற்று முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட பணம் .இன்று மனிதனின் சுவாசமாகவே மாறிவிட்டது . நிறைய பிரச்சனைகளின் தொடக்கப்புள்ளியாகவும் முடிவுப்புள்ளியாகவும் பணமே இருப்பது நம் வாழும் காலத்தின் கோலம் . நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் ,நம் உண்மையான தேவையை உணர்ந்து பணத்தைப் பயன்படுத்தினால் பல சிக்கல்களிலிருந்து தப்பிக்கலாம் . நம் கடுமையான உழைப்பின் மூலம் சம்பாதிக்கும் பணத்தை விளம்பரங்களின் மூலம் கவர்ந்து செல்ல ஒரு பெரும் கூட்டம் எப்போதும் தயாராகவே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .
"இளமையில் பெருக்காவிட்டலும் முதுமையில் சிறுக்காமல் இருக்கவேண்டும் " என்று சங்கப்பாடல்...