
தமிழ் மண்ணோடும் மக்களோடும் கலந்துவிட்ட குரல், டி.எம்.எஸ்.-ன் குரல் . தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பாடகர்களில் பெரும் புகழ்பெற்றவர் டி.எம்.எஸ் மட்டுமே . டி.எம்.எஸ்., தமிழ் திரையிசைப் பாடல்களின் தனிப்பெரும் தலைவன் . அவர் இசையமைத்துப் பாடிய முருகன் பாடல்கள் மக்களிடையே பெரும்புகழ் பெற்றன . ஆனந்த விகடனில் வெளிவந்த விகடன் 25 மூலமும் மற்றும் இசை விமர்சகர் ஷாஜி ,டி.எம்.எஸ். பற்றி எழுதிய கட்டுரை மூலமும் டி.எம்.எஸ்.பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது . டி.எம்.எஸ். பற்றி ஷாஜி எழுதிய கட்டுரை - http://musicshaji.blogspot.in/2011/01/blog-post_03.html.டி.எம்.எஸ். பற்றி எழுதப்பட்ட விரிவான கட்டுரை .
சிவாஜி மற்றும் எம்.ஜி .ஆருக்கு பாடியதை தவிர மற்றவர்களுக்குப் பாடியதில் ரஜினிக்காக பாடிய இந்தப்பாடலும் (கட்ட புள்ள...