நீங்கள் உலகின் எந்தப்பகுதியில் வசித்தாலும் வட்டியுடன் தான் வாழ வேண்டிய சூழல் உள்ளது . கொடுத்த கடனுக்கு வட்டி வாங்குபவராகவோ அல்லது வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுபவராகவோ இருக்க வேண்டும் . வட்டி கட்டுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை .ஏன் ?எல்லா நாடுகளுமே உலக வங்கியிடம் கடன் பெற்றுள்ளன ;வட்டியும் கட்டுகின்றன.கடன், பல வேளைகளில் ஆக்கசக்தியாக இருந்தாலும் சில வேளைகளில் வாழ்வையே அழிக்கும் அழிவுசக்தியாகவும் இருக்கிறது .சாதரணமாகவே வாழ்வைப் பாதிக்கும் கடனும் ,வட்டியும், உலக வணிகமயமாக்கத்தின் காரணமாக சமூக அமைப்பில் இருக்கும் அனைவரையும் வெகுவாக பாதிக்கும் காரணிகளாக மாறிவிட்டன .
மருத்துவத்திற்காகவும் ,கல்விக்காகவும் தான் நாம் அதிகம் கடன் வாங்குகிறோம் . "தகவல் பெறும் உரிமை போல , மருத்துவ...