
விவசாயம்,விவசாயி
குறித்து யாரும் எந்த நிகழ்ச்சியும் தயாரிக்கவோ ,ஒளிபரப்பவோ
முன்வருவதில்லை. வெள்ளித்திரை, சின்னத்திரை மனிதர்கள் மட்டுமே பல்வேறு
விதமான நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்றனர். இதுவும் ஒருவிதமான தீண்டாமை
தான்.இன்றைய சமூகத்தில் மிகப்பெரிய தீண்டாமையைச் சந்திப்பது விவசாயமும்,
விவசாயியும் தான். "தன் மகன்(ள்) ஒரு விவசாயி ஆக இருப்பதில் தான் பெருமை "
என்று பெற்றோர்கள் நினைக்கும் நிலை உருவாகும் வரை விவசாயம் என்பது தீண்டத்தகாததாகவே இருக்கும் . இதை
மாற்ற வேண்டியது யாருடைய கடமை? சமூகத்தின்
பிரதிபளிப்பு தான் சினிமா என்றால் 70 % திரைப்படங்கள் விவசாயம் குறித்தோ
அல்லது விவசாயம் சார்ந்த தொழில்கள் குறித்தோ , அதில் ஈடுபடும் மனிதர்கள் குறித்தோ இருக்க வேண்டும் . ஆனால்,
இங்கு, விதவிதமான காதல்கள் தவிர தமிழ் சினிமாவில் என்ன இருக்கிறது.
இந்தியாவின்...