.jpg)
எங்க பார்த்தாலும் வளர்ச்சி வளர்ச்சினே பேசிக்கிறாங்க . தனி மனித வளர்ச்சி , கிராம நகர வளர்ச்சி , பொருளாதார வளர்ச்சி ,நாட்டின் வளர்ச்சி , உலகின் வளர்ச்சினு பலவிதமான வளர்ச்சி பற்றி பலரும் வகுப்பெடுக்கறாங்க . உலகமயமாக்கல், இந்த வளர்ச்சின்ற பேர சொல்லிக்கிட்டு தான் உலகெங்கும் கிளை பரப்புகிறது. உண்மையில் உலகமயமாக்கலால் வளர்ந்ததை விட அழிந்ததே அதிகம். அப்படியென்றால் வளர்ச்சியை எப்படி நிர்ணயம் செய்வது ?
வளர்ச்சியின் உண்மையான பொருள் இயற்கையிடமிருக்கிறது. இயற்கையில் வளர்ச்சி என்பது அழிவால் வருவதில்லை. அழிவு இருந்தாலும் ஒரு கட்டுப்பாடான சமநிலை இயற்கையில் பேணப்படுகிறது. அளவுக்கு மீறிய வளர்ச்சியையும் , உடனடியான வளர்ச்சியையும் இயற்கை ஒருபோதும் ஆதரிப்பதில்லை . இன்றைய நவீன வளர்ச்சி என்பது அளவுக்கு மீறிய வளர்ச்சியையும் , உடனடியான வளர்ச்சியையும் நோக்கி மனிதனைத்...