
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்தோம் , மியான்மரிலிருந்து முஸ்லீம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டபோதும் வேடிக்கை பார்த்தோம் , ஆப்பிரிக்க நாடுகளில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்தோம் , இப்போது , அறிவுலகில் பெரிய அறிவாளிகளாக பீனிக்ஸ் பறவைகளாக அடையாளம் காணப்படும் இஸ்ரேலியர்களின் நாடான இஸ்ரேலின் தாக்குதல்கள்களால் காஸா பகுதியிலுள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் .தெற்கு இஸ்ரேல் பகுதியிலுள்ள மக்கள் , காஸாவின் ஹமாஸ் தாக்குதல்களால் பாதிக்கப்படுகறார்கள் ; கொல்லப்படுகிறார்கள் .
உலகெங்கிலுமே போரை நியாயப்படுத்தி அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் . ஏ ! போரை நியாயப்படுத்துபவர்களே உங்கள் போரை , உங்கள் சண்டையை மககள் பாதிக்காவண்ணம் போரைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாத அப்பாவி மக்களைக் கொல்லாமல் பாலைவனம் போன்ற...