
சினிமா , அரசியல் ,ஆன்மீகம் இந்த மூன்றும் தான் கதாநாயக துதிபாடலை அதிகம் வளர்க்கின்றன . சினிமாக்காரர்களையும் ,அரசியல்வாதிகளையும் ,ஆன்மீகவாதிகளையும் பிடிக்கும் என்பதற்கும் அவர்களைத் தலைவர்களாகக் கொண்டாடுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது .ஜாதி ,மதம் ,அரசியல்,சினிமா என ஒவ்வொரு விசயத்திலும் பிரிவினைவாதம் இந்த கதாநாயகத் துதிபாடல் மூலம் தான் வளர்க்கப்படுகிறது . தாங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டவர் என்ன சொன்னாலும் ,என்ன செய்தாலும் சரி என்று தான் வாதிடுவது தான் துதிபாடிகளின் பொதுக்குணமாக உள்ளது . இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை ஒரு போதும் அறிய மாட்டார்கள் .
சினிமாக்காரர்கள் ரசிகர் மன்றங்கள் முலமாகவும் , அரசியல்வாதிகள் கட்சிக் கிளைகள் மூலமாகவும் , ஆன்மீகவாதிகள் மடக் கிளைகள் மூலமாகவும் தொடர்ந்து துதிபாடப்படுகிறார்கள்....