
தூய்மை இந்தியா .கழிவு மேலாண்மையில்(Waste management) கவனம் செலுத்தாமல் சுத்தத்தைப் பற்றி பேசுவது எவ்வளவு அபத்தம்.எளிதில் மட்காத குப்பைகளான பிளாஸ்டிக் ,எலக்ட்ரானிக் கழிவுகளை பிரித்தாலே போதும் மற்ற குப்பைகள் ( காய்கறி கழிவுகள், காகிதங்கள், இறந்த உடல்கள் ,etc) மட்குண்ணிகளால் (decomposers) ஒரு சில மாதங்களில் சிதைக்கப்பட்டு மண்ணிற்கு உரமாகிவிடும். இதிலும் ஒரு சிக்கல் என்னவென்றால் மண் எங்கே ? நகரத்தையும் ,கிராமத் தெருக்களையும் கான்கிரிட்டால் மூடிவிட்டோம். அப்புறம் நிலத்தடி நீர் கீழே போய்விட்டது. குப்பை அப்படியே கிடக்கிறது என்ற புலம்பல் தான் மிச்சம்.
பூமியின் கதாநாயகர்கள் இந்த மட்குண்ணிகள் தான். இந்த மட்குண்ணிகள் இல்லாத பூமியை ஒரு நொடி கூட கற்பனை செய்ய முடியவில்லை. எளிதில் மட்கும் குப்பைகளையும் மட்காத குப்பைகளையும் தனியாக பிரித்து...