
இந்த கலைஞனைப் பற்றி ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உலகெங்கும் இன்றும் எழுதப்படுகின்றன. தொடர்ந்து அவரைப் பற்றிய ஆவணப்படங்கள் எடுக்கப்படுகின்றன ,புத்தகங்கள் எழுதப்படுகின்றன .திரைப்படம் எடுக்க கற்றுத்தரும் அனைத்து இடங்களிலும் இந்த கலைஞனின் படைப்புகள் விவாதிக்கப்படுகின்றன .எங்கெல்லாம் திரைப்படம் எடுக்கப்படுகிறதோ, பார்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த கலைஞனைக் கொண்டாடுகிறார்கள்.பெரியாரையும் ,பாரதியையும் பெற்றதற்கு தமிழ்நாடு பெருமைப்படலாம், காந்தியையும் , அம்பேத்கரையும் பெற்றதற்காக இந்தியா பெருமைப்படலாம். ஆனால், இந்த சார்லி சாப்ளினைப் பெற்றதற்காக உலகமே பெருமைப்படுகிறது .
நிறைய கலைஞர்கள் மொழி,இனம்,மதம்,நாடு இந்த மாதிரியான பிரிவினைகளுக்குள் அடங்குபவர்களாக இருக்கிறார்கள்.அதனால் இந்தப் பேதங்களைக் கடந்து அவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. சார்லி சாப்ளின்...