
இயற்கையில் மரணம் என்பது எப்போதும் எங்கேயும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.மனிதன் ஒரு அறிவுள்ள சுயநல விலங்காக இருப்பதால் தன் இனமான மனிதர்களின் மரணங்களை மட்டுமே பெரும்பாலும் கணக்கில் கொள்கிறான்.மற்ற உயிரினங்களின் மரணங்கள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை; புள்ளிவிவரங்களுடன் கணக்கை முடித்து விடுகிறான்.உலகவணிகமயமாக்கலின் தாக்கமும் , விளம்பரமயமாதலின் தாக்கமும் இந்த மனிதர்களின் மரணத்தையும் விட்டு வைக்கவில்லை .
மரணம் என்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும் , குடும்பம் என்ற அமைப்பிலிருந்து நிகழும் மரணங்கள் அந்ததந்த குடும்பங்களுக்கு இழப்பு தான் . அது யானைக் குடும்பமாக இருந்தாலும் சரி , பறவைக் குடும்பமாக இருந்தாலும் சரி , பட்டாம்பூச்சிக் குடும்பமாக இருந்தாலும் சரி , மனிதக் குடும்பமாக இருந்தாலும் சரி , மற்ற எந்த உயிரினக் குடும்பமாக...