
எளிய மனிதர்களின் கதாப்பாத்திரங்களில் நடித்து நாட்டு நடப்புகளையும் , மூட நம்பிக்கைகளையும் பகடி செய்யும் வசனங்களைப் பேசி சிரிக்க வைத்தவர் தான் கவுண்டமணி. நகைச்சுவைப் பாத்திரங்களில் தனி முத்திரையைப் பதித்திருந்தாலும் , குணச்சித்திர வேடங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களை மிஞ்சும் வகையில் அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார். வில்லன் வேடங்களிலும் அசத்தியிருப்பார்.
சமீப காலங்களில் மிகவும் தேர்ந்தெடுத்தே படங்களில் நடிக்கிறார். அதிலும் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க (49 ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை ) பெரும் முயற்சி தேவையாய் இருந்திருக்கிறது. திரையில் அதிகம் பேசப்படாத விவசாயிகளின் வாழ்வைப் பேசியதாலேயே இந்த 49ஓ திரைப்படத்தில் நடிக்க முன்வந்திருக்கிறார். திருப்பங்கள் நிறைந்த நல்ல கதை. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் பெரிய...