
தமிழ் கூறும் நல்லுலகில் சிற்றிதழ்களுக்கான களம் இன்னமும் ஆக்கமுடன் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. மிகுந்த சிரமங்களுக்கிடையே தான் ஒவ்வொரு சிற்றிதழின் இதழும் வெளிவருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி 'எனும் சிற்றிதழின் நிலையும் அதுவே. ஆனால் ஒவ்வொரு இதழும் அதற்கான பக்கங்களைத் தேடிக்கொள்கின்றன. சற்றும் பரிச்சயமில்லாத விசயங்களை வெளிக்கொண்டு வருவதே சிற்றதழ்களின் ஆகப்பெரும் பணியாக இருக்கிறது. வாசித்தவரையில் குறி இதழ்களில் குறைந்தபட்சம் ஒரு விசயமாவது பரிச்சயமில்லாததாக இருக்கும். இந்த வகையில் சிற்றிதழ்களுக்கு நமது தொடர்ந்த ஆதரவு தேவைப்படுகிறது.
சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு இதழ் குறித்த ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்களும் ,பொருளாதார வளமும் தான் முக்கியமானதாக இருக்கின்றன . மிகுந்த நெருக்கடிக்கிடையே...