
முகநூலில் பதிவிட்ட சில வாசகங்கள் .....
இருத்தலை, இல்லாதபோதும் கற்பனை செய்கிறது , மனம் !
நம் சோம்பேறித்தனத்திற்கு
விலையாக இன்னும் என்னென்னவெல்லாம் கொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை. சோம்பேறியாதலின் மற்றொரு பெயர் தான்#நவீனமயமாதலோ ! ?
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஒரு திருத்தமான ஒழுங்கமைவுடன் நடந்துகொண்டே இருக்கின்றன. நாம் தான் அவற்றைப் புரிந்து கொள்ளத் திராணியில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறோம்.#மானிடவாழ்க்கை
வயோதிகத்தில் தன் வாழ்க்கைத் துணையை இழக்கும் ஆண் , ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தை போலவே மாறிவிடுகிறார்!#அவ்வளவுதான்ஆம்பள
காரியங்கள் செய்வதை விட்டுவிட்டு காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். #மனிதன்ஒருகாரணப்பயல்
ஒரு பக்கம் நூறு ரூபாயிலிருந்து கோடிகள் சம்பாதித்தவர்களை சாதனையாளர்கள் என்று சொல்கிறார்கள்....