
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இவ்விரு திரைப்படங்களும் வெளிப்படுத்துகின்றன. அடுத்தடுத்த நாட்களில் இத்திரைப்படங்களை பார்க்க நேர்ந்ததால் ஒப்பிட்டு எழுதவேண்டியதாகி விட்டது. கம்யூனிச கோட்பாடுகள் நிறைந்த மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் தான் சிவப்பு மல்லியிலும் ஜோக்கரிலும் முன்னிலை வகிக்கிறது. தலைவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் இரண்டு திரைப்படங்களிலும் இமிடேட் செய்யப்படுகின்றனர். இரண்டு திரைப்படங்களின் இறுதிக்காட்சியிலும் மல்லிகை வாங்கி வரும் கதாபாத்திரம் கொல்லப்படுகிறது. ஆச்சரிய ஒற்றுமையாக இவ்விரு திரைப்படங்களும் ஒரே நாளில் ( ஆகஸ்ட் 12 ) வெளியிடப்பட்டுள்ளன.
சிவப்பு மல்லி :
சிவப்பு மல்லி திரைப்படத்தில் முதலில் கவர்ந்த விசயம் , திரைப்படம் முழுவதும் விஜயகாந்த் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம் பறையுடன் வருவது தான். இதற்கு முன்...