Saturday, December 23, 2017

முடிவிற்கு வந்த டீக்கடை!

கடை தொடங்குவதற்குத் தேவையான சாமான்கள் வாங்கக் கூட பணமில்லாமல் அப்பாவின் நண்பர்கள் உதவியுடன், அவர்களின் நிர்பந்தத்தால் தொடங்கப்பட்ட கடையிது. அப்புறம் கடையின் வருமானத்தின் மூலம் அந்த கடன் படிப்படியாக கட்டப்பட்டது. அதன் பிறகு இதை தங்களின் வாழ்க்கையாக நினைத்து கெட்டியாக பிடித்துக்கொண்டு தங்களின் அயராத உழைப்பால் மேலே வந்தது தான் எங்கள் குடும்பம். அம்மா , அப்பா ஆகிய இருவரின் உழைப்பைக் கண்டு இன்று வரை மிரண்டு தான் போகிறேன். ' sun-கு ஏது sunday ' என்பது போல இன்று வரை உழைத்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். இவர்களின் உழைப்பிற்கு சித்தப்பா துணை நிற்கிறார். ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள் என்று சொல்வார்கள். ஒரு எளிய தொழிலுக்கும் அது தான் வயதோ ? சரியான சரக்கு மாஸ்டர் அமையாதது தான் முதல் பின்னடைவாக இருந்தது. அம்மாவிற்கு எல்லாவிதமான பலகாரங்களும்...

Thursday, November 30, 2017

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !

வயதிற்கு வருதல் என்ற நிகழ்வை வைத்து நிறைய விசயங்களை தொடர்புபடுத்தி பேச முடியும். 14 வயது என அறிவியல் நிர்ணயித்தாலும் கால மாற்றத்தால் இந்நிகழ்வு முன்பின் நிகழ்கிறது. அதற்கு முன்பே பாலியல் துன்புறுத்தலை குறிப்பிட்ட சதவீத குழந்தைகள் சந்திக்க வேண்டி வருகிறது. ஆண் குழந்தையோ , பெண் குழந்தையோ யாரோ ஒருவரின் இச்சைக்கு பலியாகிவிடுகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட இக்கொடுமை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் சதவீதத்தில் தான் வித்தியாசம் உள்ளது. பாலியல் கல்வி கற்பிக்கப்படும் நாடுகளிலேயே இப்படி என்றால் நம் நாட்டின் நிலைமை இன்னும் மோசம் தான். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அரசால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்தியாவில் 53 சதவீத குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்....

Friday, September 29, 2017

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !

(இந்த தொடர் வாசக மனநிலையில் தான்  எழுதப்படுகிறது. அதனால் குறைபாடுகள் இருக்கலாம். மன உளவியல் நிபுணர் ஷாலினி அவர்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.  பாலியல் சிக்கல்கள் குறித்தான விவாதங்களை முன்னெடுப்பதே இதன் நோக்கம் ) மனிதக்குழந்தை 1 1/2   வயதில் தான் முழுவளர்ச்சியை எட்டுகிறது. அதாவது ஆடு, மாடு போன்ற உயிரினங்களின் குட்டிகள் பிறக்கும்போதே பெற்றிருக்கும் வளர்ச்சி அது. அதனாலேயே குழந்தைகளை இந்த ஒன்றரை வயது வரை மிக கவனமாக கையாள வேண்டிய சூழல் உருவாகிறது. இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலானதாக உள்ளது. அளவில்லாத பொறுமையும் , கவனமும், நேரமும் தேவைப்படுகிறது. கூட்டுக்குடும்ப அமைப்பு சிதைவடைந்த நிலையில்  தனிக்குடித்தனங்களில் இது இன்னும் சவாலானது. இயற்கையின் நியதிப்படி   குழந்தைகள் பிறப்பதற்கு...

Saturday, August 26, 2017

தரமணி !

காட்சி மொழியின் உதவியுடன் என்னவெல்லாம் பேச முடியும் என்பதை தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல தமிழ் திரையுலகிற்கும் சேர்த்தே செய்து காட்டியிருக்கிறார் , இயக்குநர் ராம். வயது வந்த அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். நாம் எந்த அளவிற்கு போலியான கற்பிதங்களை உருவாக்கி வைத்து கொண்டு உளண்டு கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாக காட்சிப்படுத்தி இருக்கிறார். ஒரு நாகரிக சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை அரசியல் பேசப்பட்டிருக்கிறது. கட்சி அரசியல் அல்ல ; சமூக அரசியல். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் பேச வேண்டிய அரசியல். பல இடங்களில் மிக கூர்மையான வசனங்கள் , விமர்சனங்கள் , கோபங்கள் என விரவி கிடந்தாலும் மனித மனங்களின் ஆதாரமார அன்பையே முன்னிலைப் படுத்தியிருக்கிறார்....

Thursday, July 27, 2017

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !

பாலியல் என்றவுடன் ஒன்று கொச்சைப்படுத்தப்படுகிறது அல்லது ஒதுக்கி வைக்கப்படுகிறது. கொச்சைப்படுத்தவோ , ஒதுக்கி வைக்கவோ பாலியலில் எதுவுமில்லை. கொச்சைப்படுத்துவதாலும் , ஒதுக்கி வைப்பதாலும் தான் பாலியல் சிக்கல்கள் உருவாகின்றன. பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில்தான் தீர்வுகள் உள்ளன. ஆதலால் புரிந்து கொள்ள பாலியல் பேசுவோம் . இயற்கையைப் புரிந்து கொள்வதன் முலமே பாலியலையும் புரிந்து கொள்ள முடியும். இனப்பெருக்கம் தான் இயற்கையின் ஆதாரம். இரண்டு வகை இனப்பெருக்கங்கள் இருக்கின்றன.  ஒன்று பாலிலா இனப்பெருக்கம். மற்றொன்று பால் இனப்பெருக்கம். பாலிலா இனப்பெருக்கத்தில் ஆண் , பெண் என்ற தனி உயிரிகள் கூடுவதற்கு தேவையேயில்லை. தன்னைத்தானே பகுத்துக்கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறை உருவாகிறது. பால் இனப்பெருக்கத்தில் ஆண் , பெண் உயரிகளும் உறுப்புகளும்...

Saturday, June 24, 2017

மண் பேசும் !

நாம் வாழும் பூமி மண்ணின் மூலமே சுவாசிக்கிறது. மனித இனத்தின் செயல்பாடுகளால் நாளுக்கு நாள் பூமி மூச்சு விடவே சிரமப்படுகிறது. மண்ணே தெரியாதவாறு கான்கிரீட்களை கொட்டுகிறோம் அல்லது செரிக்க முடியாத அளவிற்கு கழிவுகளைக் கொட்டுகிறோம்.மிச்சமிருக்கும் விவசாய நிலங்களில் மட்டுமே மண் வெளியே தெரிகிறது. கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் மண்ணில் வாழ்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் நம் பூமியின் உயிர்ச்சூழலில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கின்றன. அவை ,மண்ணில் தாவரங்கள் , மரங்கள் வளர்வதற்கு துணை புரிவதோடு நாம் அனாயசமாக தூக்கியெறியும் பொருட்களை மட்கச் செய்து மண்ணிற்கு வளம் சேர்க்கின்றன. பூமியின் கதாநாயகர்கள், மட்குண்ணிகள் என அழைக்கப்படும் இந்த நுண்ணுயிரிகள் தான். நாம் தூக்கியெறிபவை மட்காமல் போனால் என்ன ஆவது ? மண்ணிலிருந்து தொடங்கி மண்ணிலேயே முடிகிறது...

Wednesday, May 17, 2017

லென்ஸ் !

ஒரு சென்ஸிடிவான விசயத்தை எடுத்துக்கொண்டு அதை பிரச்சார நெடியில்லாமல் திரைப்படமாக எடுப்பது நம் சூழலில் அவ்வளவு எளிதானதில்லை. இதே திரைப்படம் பிரச்சார நெடியுடன் கருத்து சொல்வது போல எடுக்கப்பட்டிருந்தால் இந்த திரைப்படமும் பத்தோடு பதினொன்றாக மாறியிருக்கும். ஆனால் இத்திரைப்படம் நம்மை சுயவிசாரனைக்கு உட்படுத்துகிறது. ஆழ்மன வக்கிரங்களை , அதனால் மற்றவர்களுக்கு உருவாகும் பாதிப்புகளை மிக அழுத்தமாக பேசுகிறது. நாம் மிக எளிதாக கடந்து செல்லும் விசயத்தில் நிறைந்திருக்கும் அகச்சிக்கல்களை நுட்பமுடன் பதிவு செய்கிறது. தற்போதைய சூழலில் இது மாறுபட்ட திரைப்படம்.  ஏனென்றால் இத்திரைப்படத்தின் உள்ளடக்கம் தான் பேசுபொருளாக இருக்கிறது. இதுவரையான விமர்சனங்கள் , நடிகர் , நடிகைகளைப் பற்றியோ , இசை , ஒளிப்பதிவு குறித்தோ ஏன் இயக்கம் குறித்தோ கூட இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை....

Wednesday, April 5, 2017

ஊதாவும் ரோமும் !

கலை, மனிதனாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா அது - திரையில் எம்.ஆர்.ராதா. Blue is the warmest color - ஆண் -பெண் சேர்ந்து வாழும்போது எழும் சிக்கல்களை மையமாக வைத்து நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன. காதல் , கோபம் , உரிமை கொண்டாடுதல் , பூரிப்பு , கொண்டாட்டம் , பிரிவு , ஏக்கம் , கண்ணீர் போன்ற அனைத்தும் பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழும் போதும் நிகழும் என்பதை இத்திரைப்படம் முன்வைத்தது. பிடிக்கவில்லையென்றால் பிரிந்து போவதும் நிகழ்கிறது. ஆண் -பெண் உறவோ , பெண் -பெண் உறவோ பிரிந்து செல்லும் இருவரில் ஒருவர் வெகு சீக்கரமாக இயல்பான வாழ்விற்கு திரும்பி விடுகிறார். மற்றொருவரால் அவ்வளவு எளிதில் இயல்பு வாழ்விற்கு திரும்பிவிட முடிவதில்லை. அதையும் இத்திரைப்படம் வெளிப்படுத்தியது. இத்திரைப்படத்தில் வயதில் மூத்த பெண்ணிற்கும் (ஆண்களைப்...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms