
மத்தியிலும் சரி , மாநிலத்திலும் சரி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மகத்தான வாய்ப்பை காலம் வழங்கியிருக்கிறது. அதற்கு முதலில் முதன்மையான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேறுபாடுகளை பேசித்தீர்த்து ஒன்றிணைய வேண்டும். ஒரே கட்சியாக கட்சியின் கொள்கைகளை பரப்புரை செய்ய வேண்டும். மற்ற அரசியல் கட்சிகளை விட தாங்கள் எந்த விதத்தில் வேறுபடுகிறோம் என்பதை மக்களுக்குத் தெளிவாக புரிய வைக்க வேண்டும். மக்களுக்கான எல்லாப் போராட்டங்களிலும் கம்யூனிஸ இயக்கங்களே முன்னிருக்கின்றன என்பதை மக்கள் உணரும்படி செய்ய வேண்டும்.
மத்தியில் காங்கிரஸ் மீது நம்பிக்கையிழந்து தான் மக்கள், இந்துத்துவா கட்சி என்று தெரிந்தே தான் பாஜகவிற்கு வாக்களித்தார்கள்.மோடியின் குஜராத் மாடல் விளமபரமும் ஒரு காரணம். ஆனால் இனிமேல் அதிகாரத்தைக் கைபற்ற வாய்ப்பே பெறப்போவதில்லை என்ற...