
இந்திய கிரிக்கெட் அணி எப்போதுமே டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது . டெஸ்ட் போட்டிகளுக்கென்று தனிப்பட்ட திறமையாளர்கள் தொடந்து உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். 90 களுக்குப் பிறகு டிராவிட் , கும்ளே , லக்ஷ்மன் , ஹர்பஜன் , புஜாரா , அஸ்வின் என டெஸ்ட் போட்டிகளுக்கான தனித்த திறமையாளர்கள் தொடர்ந்து உருவாகிறார்கள். இவர்கள் , மற்ற வடிவ கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுத்தாலும் டெஸ்ட் போட்டிகளாலேயே நினைவுகூறப்படுகிறார்கள். காரணம் , இவர்கள் , டெஸ்ட் போட்டிகளில் நீடித்த திறமையை வெளிபடுத்துவது தான். இவர்களுக்கு மற்ற வீரர்கள் ஓரளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தாலே போதும் போட்டிகளில் எளிதாக வென்று விடலாம்.
ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு இங்கிலாந்து தொடர் தான் கடினமானது என நினைத்துக் கொண்டிருந்தோம் . இங்கிலாந்து தொடர் கடினமாக இருந்தாலும் தொடரை...