
கலை, மனிதனாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா அது - திரையில் எம்.ஆர்.ராதா.
Blue is the warmest color - ஆண் -பெண் சேர்ந்து வாழும்போது எழும் சிக்கல்களை மையமாக வைத்து நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன. காதல் , கோபம் , உரிமை கொண்டாடுதல் , பூரிப்பு , கொண்டாட்டம் , பிரிவு , ஏக்கம் , கண்ணீர் போன்ற அனைத்தும் பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழும் போதும் நிகழும் என்பதை இத்திரைப்படம் முன்வைத்தது. பிடிக்கவில்லையென்றால் பிரிந்து போவதும் நிகழ்கிறது. ஆண் -பெண் உறவோ , பெண் -பெண் உறவோ பிரிந்து செல்லும் இருவரில் ஒருவர் வெகு சீக்கரமாக இயல்பான வாழ்விற்கு திரும்பி விடுகிறார். மற்றொருவரால் அவ்வளவு எளிதில் இயல்பு வாழ்விற்கு திரும்பிவிட முடிவதில்லை. அதையும் இத்திரைப்படம் வெளிப்படுத்தியது. இத்திரைப்படத்தில் வயதில் மூத்த பெண்ணிற்கும் (ஆண்களைப்...