
ஒரு சென்ஸிடிவான விசயத்தை எடுத்துக்கொண்டு அதை பிரச்சார நெடியில்லாமல் திரைப்படமாக எடுப்பது நம் சூழலில் அவ்வளவு எளிதானதில்லை. இதே திரைப்படம் பிரச்சார நெடியுடன் கருத்து சொல்வது போல எடுக்கப்பட்டிருந்தால் இந்த திரைப்படமும் பத்தோடு பதினொன்றாக மாறியிருக்கும். ஆனால் இத்திரைப்படம் நம்மை சுயவிசாரனைக்கு உட்படுத்துகிறது. ஆழ்மன வக்கிரங்களை , அதனால் மற்றவர்களுக்கு உருவாகும் பாதிப்புகளை மிக அழுத்தமாக பேசுகிறது. நாம் மிக எளிதாக கடந்து செல்லும் விசயத்தில் நிறைந்திருக்கும் அகச்சிக்கல்களை நுட்பமுடன் பதிவு செய்கிறது.
தற்போதைய சூழலில் இது மாறுபட்ட திரைப்படம். ஏனென்றால் இத்திரைப்படத்தின் உள்ளடக்கம் தான் பேசுபொருளாக இருக்கிறது. இதுவரையான விமர்சனங்கள் , நடிகர் , நடிகைகளைப் பற்றியோ , இசை , ஒளிப்பதிவு குறித்தோ ஏன் இயக்கம் குறித்தோ கூட இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை....