
காட்சி மொழியின் உதவியுடன் என்னவெல்லாம் பேச முடியும் என்பதை தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல தமிழ் திரையுலகிற்கும் சேர்த்தே செய்து காட்டியிருக்கிறார் , இயக்குநர் ராம். வயது வந்த அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். நாம் எந்த அளவிற்கு போலியான கற்பிதங்களை உருவாக்கி வைத்து கொண்டு உளண்டு கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாக காட்சிப்படுத்தி இருக்கிறார். ஒரு நாகரிக சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்.
திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை அரசியல் பேசப்பட்டிருக்கிறது. கட்சி அரசியல் அல்ல ; சமூக அரசியல். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் பேச வேண்டிய அரசியல். பல இடங்களில் மிக கூர்மையான வசனங்கள் , விமர்சனங்கள் , கோபங்கள் என விரவி கிடந்தாலும் மனித மனங்களின் ஆதாரமார அன்பையே முன்னிலைப் படுத்தியிருக்கிறார்....