
(இந்த தொடர் வாசக மனநிலையில் தான் எழுதப்படுகிறது. அதனால் குறைபாடுகள் இருக்கலாம். மன உளவியல் நிபுணர் ஷாலினி அவர்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். பாலியல் சிக்கல்கள் குறித்தான விவாதங்களை முன்னெடுப்பதே இதன் நோக்கம் )
மனிதக்குழந்தை 1 1/2 வயதில் தான் முழுவளர்ச்சியை எட்டுகிறது. அதாவது ஆடு, மாடு போன்ற உயிரினங்களின் குட்டிகள் பிறக்கும்போதே பெற்றிருக்கும் வளர்ச்சி அது. அதனாலேயே குழந்தைகளை இந்த ஒன்றரை வயது வரை மிக கவனமாக கையாள வேண்டிய சூழல் உருவாகிறது. இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலானதாக உள்ளது. அளவில்லாத பொறுமையும் , கவனமும், நேரமும் தேவைப்படுகிறது. கூட்டுக்குடும்ப அமைப்பு சிதைவடைந்த நிலையில் தனிக்குடித்தனங்களில் இது இன்னும் சவாலானது.
இயற்கையின் நியதிப்படி குழந்தைகள் பிறப்பதற்கு...