
வயதிற்கு வருதல் என்ற நிகழ்வை வைத்து நிறைய விசயங்களை தொடர்புபடுத்தி பேச முடியும். 14 வயது என அறிவியல் நிர்ணயித்தாலும்
கால மாற்றத்தால் இந்நிகழ்வு முன்பின் நிகழ்கிறது. அதற்கு முன்பே பாலியல் துன்புறுத்தலை குறிப்பிட்ட சதவீத குழந்தைகள் சந்திக்க வேண்டி வருகிறது. ஆண் குழந்தையோ , பெண் குழந்தையோ யாரோ ஒருவரின் இச்சைக்கு பலியாகிவிடுகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட இக்கொடுமை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் சதவீதத்தில் தான் வித்தியாசம் உள்ளது. பாலியல் கல்வி கற்பிக்கப்படும் நாடுகளிலேயே இப்படி என்றால் நம் நாட்டின் நிலைமை இன்னும் மோசம் தான்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அரசால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்தியாவில் 53 சதவீத குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்....