
கடை தொடங்குவதற்குத் தேவையான சாமான்கள் வாங்கக் கூட பணமில்லாமல் அப்பாவின் நண்பர்கள் உதவியுடன், அவர்களின் நிர்பந்தத்தால் தொடங்கப்பட்ட கடையிது. அப்புறம் கடையின் வருமானத்தின் மூலம் அந்த கடன் படிப்படியாக கட்டப்பட்டது. அதன் பிறகு இதை தங்களின் வாழ்க்கையாக நினைத்து கெட்டியாக பிடித்துக்கொண்டு தங்களின் அயராத உழைப்பால் மேலே வந்தது தான் எங்கள் குடும்பம். அம்மா , அப்பா ஆகிய இருவரின் உழைப்பைக் கண்டு இன்று வரை மிரண்டு தான் போகிறேன். ' sun-கு ஏது sunday ' என்பது போல இன்று வரை உழைத்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். இவர்களின் உழைப்பிற்கு சித்தப்பா துணை நிற்கிறார்.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள் என்று சொல்வார்கள். ஒரு எளிய தொழிலுக்கும் அது தான் வயதோ ? சரியான சரக்கு மாஸ்டர் அமையாதது தான் முதல் பின்னடைவாக இருந்தது. அம்மாவிற்கு எல்லாவிதமான பலகாரங்களும்...