
" மனித சமூகத்துக்கு முதலில் மிக வேகமாக, வயித்துக்கு சோறு நிறைவாகக் கிடைக்கிறதா. அடுத்து , ஆணும் பெண்ணும் பாலியல் பசி இல்லாமல், சிக்கல் இல்லாமல் நிறைவாக இருக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த இரண்டையும் ஏற்படுத்தித் தந்துவிட்டு அதன் பிறகு ஒழுக்கத்தை வற்புறுத்தினால் அர்த்தம் உண்டு. வயித்துப் பசி ஒரு கொடூரம். பாலியல் பசி அதைவிடக் கொடூரம் " - கி.ராஜநாராயணன்.
தமிழக சூழலில் பாலியலை, தான் சேகரித்த பாலியல் கதைகளின் வாயிலாக மிகச்சரியாக முன்வைத்த படைப்பாளியாக கி.ராஜநாராயணன் அவர்களைக் கூறலாம்.பாலியலை சார்பில்லாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைத்தவர். இந்த புரிதல் ஏற்பட அவர் சேகரித்த கதைகளும் உதவியிருக்கலாம். யோசித்துப் பார்த்தோமேயானால் நாட்டில் நிகழும் சமூகக் குற்றங்களுக்கு வயித்துப்பசியும் , பாலியல் பசியும் தான் முக்கிய காரணங்களாக...