
'ஒருவனுக்கு ஒருத்தி ' என்பது ஒரு போலியான கற்பிதம். சமூகத்தில் நிகழும் பல்வேறு விதமான பாலியல் சிக்கல்களுக்கு இந்த சித்தாந்தமும் ஒரு முக்கியமான காரணம். இதனாலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்று சொல்லி பெண்களை கட்டுப்படுத்தும் சமூகம் ஆண்களை எதுவும் சொல்வதில்லை. ஆணிற்கும் , பெண்ணிற்கும் மறைமுக கட்டுபாட்டையும் , நெருக்கடியையும், சுதந்திரமின்மையையும் இந்த 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்பது உருவாக்குகிறது.
திருமணம் என்பதே, இனி இந்த ஆணும் இந்த பெண்ணும் 'ஒருவனுக்கு ஒருத்தி'யாக வாழப் போகிறார்கள் என்பதை எல்லோருக்கும் அறிவிக்கும் ஒரு நிகழ்வாகவே இருக்கிறது.அதன் பிறகு மீறல் நிகழாமல் இருக்கும் வகையில் அவர்களை சமூகம் கண்காணிக்கிறது. ஆனாலும் அங்கே மீறல்கள் நிகழ்கின்றன. மனப்பொருத்தம் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது....