
தற்கொலைகள், குடிப்பழக்கம் இந்த இரண்டு விசயங்கள் தான் 2018 முழுவதுமே தொந்தரவு செய்து கொண்டே இருந்தன. இவற்றை பற்றிய செய்திகளை சாதாரணமாக கடந்து போக முடியவில்லை. இதற்கு முன்பும் தற்கொலைகளும், குடிப்பழக்கமும் இருந்தது தான் என்றாலும் 2018ல் இவை மிகவும் அதிகரித்து உள்ளன. மிகவும் சாதாரண காரணங்களுக்காகக் கூட தற்கொலைகள் நிகழ்வது நல்ல அறிகுறி அல்ல. அம்மா இறந்த துக்கத்தால் மகனும் மருமகளும் தற்கொலை, அம்மா- அப்பா சண்டை போடுவதை நிறுத்தாததால் மகள் தற்கொலை, உறவுகள் வெளியூரில் வேலை செய்வதால் தந்தை இறந்த பிறகு தனியாக வாழ நேர்ந்ததால் பதினொன்றாம் வகுப்பு மாணவன் தற்கொலை என தற்கொலைகள் மிகவும் விரைவான வேகத்தில் அதிகரித்து வருகின்றன.
எந்த காரணத்திற்காகவும் தற்கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்கொலை எண்ணம் என்பது எப்போதும் எல்லோருக்குள்ளும் இருந்து வரும் ஒன்று தான்....