
பாலியல் ஒழுக்கம் என்பதை வரையறை செய்யவே முடியாது. அது இடத்துக்கு இடம் மாறுபடும் ஒன்றாகவே இருந்து வருகிறது. காலத்துக்கு ஏற்பவும் பாலியல் ஒழுக்கம் என்பதில் தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் கூட போன தலைமுறைக்கு முன்பு வரை பல தார மணங்களை இதே சமூகம் அனுமதித்து இருக்கிறது. இப்போதும் ஒரு சில சமூகங்களில் பல தார மணத்திற்கு தடையில்லை. முன்பு, இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக அந்த மனிதரின் மரியாதை குறையவில்லை . அந்த காலகட்டத்தில் பெண்கள் இரண்டு ஆண்களோடு திருமண பந்தத்தில் வாழவில்லையா , இருவருக்கும் பிள்ளைகள் பெற வில்லையா ? என்றால் வாழ்ந்தார்கள், பிள்ளைகள் பெற்றார்கள். ஆனால் முதல் பந்தத்தை உதறிவிட்டு தான் அதை செய்ய முடிந்தது. அப்படி வாழ்ந்த பெண்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு....