
இப்படியான ஒரு இறுதிப்போட்டி இனி நடைபெற வாய்ப்பில்லை எனச் சொல்லும் அளவிற்கு மிகவும் சுவாரசியமான, பரபரப்பான போட்டியாக 2019 உலககோப்பையின் இறுதிப்போட்டி அமைந்தது. ஆனால் போட்டியின் முடிவு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவில்லை.
அரையிறுதிக்கான தகுதிச்சுற்றில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் அரையிறுதியிலேயே வெளியேற்றப்பட்டுவிட்டன. தகுதிச்சுற்றில் முதலிடத்திலிருந்து தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்றதால் நான்காம் இடம் பிடித்து தட்டுத்தடுமாறி தான் நியூஸிலாந்து அரையிறுதி வாய்ப்பைப் பெற்றது. இங்கிலாந்து அணிக்கோ கடைசி இரண்டு முதல் சுற்று போட்டிகளையும் வென்றால் மட்டுமே அரையிறுதியில் நுழைய முடியும் என்ற நிலைமை. அந்த கடைசி இரண்டு போட்டிகளும் இந்தியாவிற்கும், நியூஸிலாந்திற்கும் எதிரானதாக இருந்தது. இந்தியாவுடனான போட்டியில்...