
எதற்காக அஞ்சினோமோ அது தான் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 2014 பாஜக ஆட்சியில் அமித்ஷா ஆட்சிக்கு வெளியில் இருந்தார். மக்களுக்கு தொடர்ச்சியான பாதிப்புகள் இருந்தாலும் வன்முறையோ, மனிதத்தன்மையற்ற செயல்களோ தூண்டிவிடபடவில்லை. அங்கங்கே இஸ்லாமியர்களுக்கு எதிரான சிறுசிறு வன்முறைகள் மட்டுமே நடைபெற்றன. யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேச முதல்வராக பதவியேற்ற பிறகு மாநில அரசே பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது, ஈடுபடுகிறது. ஆதித்யநாத் எனும் மதவாதி பதவியில் இருக்கும் வரை இது தொடரவே செய்யும். ஆனால் இந்தியாவின் மற்ற பகுதிகள் தப்பித்தன.
இந்த 2019 பாஜக ஆட்சியில் அமித்ஷா எனும் மனிதத்தன்மையற்ற உயிரினம் நேரடியாக ஆட்சிக்குள் வந்தது. உள்துறை அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டது. நன்றாக கவனித்து பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியும். நரேந்திர மோடியால் பொய்களை உண்மையென்று...