
நாளுக்குநாள் நமது மனங்கள் மரத்துப் போய்க்கொண்டே இருக்கின்றன. பொதுவாக வன்முறை, கொலை, பாலியல் வன்கொடுமைகள் பற்றி தெரிய வரும்போது கண்டும் காணாமல் கடந்து விடுகிறோம். அதே நேரத்தில் கொடூர வன்முறை, கொடூர கொலை, கொடூர பாலியல் வன்கொடுமை என்றால்தான் கொஞ்சமாவது கவனிக்கிறோம். அந்தளவிற்கு நமது மனங்கள் சிதைவடைந்துள்ளன.
லாக்கப் கொலைகளை சாதாரணமாக கடந்து போனோம். சாத்தான்குளம் லாக்கப் கொலைகள் கொடூரமாக நிகழ்த்தப்படத்தால்தான் அதிக கவனம் பெற்றன. தீவிர மதவாதியான யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேச முதல்வரான பிறகு உத்திரபிரதேச மாநில மக்கள் பல்வேறு விதமான கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். இன்றைய இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உத்திரபிரதேசத்தில்தான் அதிகம். சாதிய ,மதவாத கொடுமைகளும் அங்குதான் அதிகம். மற்ற சாதிய வன்கொடுமைகளோ, பாலியல் வன்கொடுமைகளோ செய்திகளாக...