"ஓட்டு வாங்கற வரைக்கும் ஜனங்களை எஜமானரா நினைக்கனும். வாங்கனதுக்கு அப்புறம் நாம எஜமானரா இருக்கனும்
"
" தேர்தலையும் தீபாவளி மாதிரி ஒரு பண்டிகை நாளா கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. என்ன ஒரு வித்தியாசம். தீபாவளிக்கு வேட்டு போடுறாங்க.தேர்தலுக்கு ஓட்டு போடறாங்க "
" நாம தாராளமா தப்பு பண்றோம். ஏராளமா சம்பாரிக்கிறோம்னு தெரிஞ்சு தான் நமக்கு ஓட்டு போடறாங்க "
"பசியை என்னைக்காவது தீர்த்திடுவோம்னு அவுங்க நெனச்சுக்கிட்டே இருக்கனும். தீர்க்கக் கூடாது, தீர்க்கவே கூடாது. நாம சோசலிசம் பேசிக்கிட்டே இருக்கனும். ஜனங்க சோத்துக்கு அலைஞ்சுகிட்டு இருக்கனும். இது தான்யா அரசியல் "
"ஒரே பொய்யை நாலு தடவை திருப்பி திருப்பி சொன்னா அதையே ஜனங்க உண்மைனு நம்ப ஆரம்பிச்சுருவாங்க "
" மக்கள், போலீச இன்னைக்கு வெறுக்கல. நம்ம நாடு சுதந்திரம் அடையறதுக்கு முன்னால பிரிட்டிஷ்காரன் காலத்திலிருந்தே போலீசுனா விரோதியாத்தான் பார்க்குறாங்க. அப்பவும் சரி இப்பவும் சரி நாட்டை ஆளுறவங்க போலீச அடியாளாத்தான் பயன்படுத்துறாங்க "
" சட்டம்கிறது ஒரு கழுதை மாதிரி முன்னாடி போன கடிக்கும் , பின்னாடி போன ஒதைக்கும் "
" உங்களுக்கு சாதகமான கட்சிக்காரங்க தப்பு பண்ணா அப்படியே மறைச்சுடுவீங்க. உங்களுக்கு பிடிக்காத கட்சிக்காரங்க தப்பு பண்ணா பக்கம் பக்கம் எழுதுவீங்க. பொறுப்பு போலீஸ்காரங்களுக்கு மட்டும் அல்ல உங்களுக்கும் இருக்கிறது "
'புலன் விசாரணை (1990)' திரைப்படத்திற்காக லியாகத் அலிகான் எழுதிய வசனங்கள் 🔥
மேலும் படிக்க :
No comments:
Post a Comment