அதிகார மையத்தின் கைகள் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகின்றன . என்ன தப்பு செய்கிறார் என்பது முக்கியமல்ல , யார் தப்பு செய்கிறார் என்பது தான் முக்கியமாகப் போய்விட்டது . சமூகத்தில் நாம் இருக்கும் இடத்தைப் பொறுத்தே நமது தப்புக்குத் தண்டனை . மற்றபடி நீதி ,நியாயம் ,சமதர்மம் என்பதெல்லாம் மண்ணை விட்டு மறைந்தே போய் விட்டது போல தோன்றுகிறது .ஆறறிவு சமூகத்தின் மிகப்பெரிய அவலம் இது . அதிகார வர்க்கம் செய்யும் அனைத்து செயல்களையும் நியாமாக்குவது தான் ஊடகங்களின் முதல் வேலையாகிவிட்டது . எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் தான் சாதாரண மனிதனின் ஒவ்வொரு நாளும் கடந்து போகிறது .
சென்னையில் இரண்டு வங்கிகளில் கொள்ளையடித்தவர்களில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் . காரணம் , மக்களின் பணத்தில் சில லட்சங்கள் அவர்களால் திருடப்பட்டுள்ளது . அதற்கு தண்டனை மரணம் . என்னிடம் இருப்பது ஒரே கேள்வி தான் . மக்கள் பணத்தில் சில லட்சங்கள் திருடியவர்களுக்கே தண்டனை மரணம் என்றால் மக்கள் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கும் , அரசு அதிகாரிகளுக்கும் என்ன தண்டனை ?
திருடுவது சரி என்று நான் சொல்லவில்லை .யார் திருடினாலும் தப்பு தப்பு தான் .தண்டனையும் தேவை தான் .ஆனால் , தண்டனை என்று வரும் பொழுது எளிய மனிதன் தான் அதிகம் பாதிக்கப்படுகிறான் . அதிகாரவர்க்கம் எவ்வளவு பெரிய தப்பு செய்தாலும் என்றுமே தண்டனை அனுபவித்ததில்லை . இதே 35,00,000 ரூபாய் மக்கள் பணத்தை ஒரு அரசியல்வாதி திருடிவிட்டான் என்று வைத்துக்கொள்வோம் . திருடப்பட்டது மக்கள் பணம் என்று கொதித்து எழும் காவல் துறை அந்த அரசியல்வாதியை உடனே சுட்டுக்கொல்லுமா ?
வங்கிகளில் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக இவ்வளவு விரைவாக செயலாற்றிய காவல்துறை மற்ற கொள்ளைக்காரர்களுக்கு ( அரசியல்வாதிகள் இன்னும் பலர் ) எதிராக எப்போதும் பொங்காமலே இருப்பது ஏன் ? இரண்டு பிரிவிலும் திருடப்படுவது மக்கள் பணம் தான் . எந்த வித அடையாளமும் இல்லாத மனிதன் திருடும் போது அவனுக்கு கிடைக்கும் பரிசு மரணம் . பல்வேறு அடையாளங்களுடன் ( கட்சி ,பதவி ,அதிகாரம் இன்னும் பல ) திருடுபவர்களுக்கு கிடைக்கும் பரிசு புகழ் ( இன்னும் பல. ஆனால் ,கண்டிப்பாக மரணம் கிடைக்காது !?) . ஏன் இவ்வளவு பெரிய வேறுபாடு ???
அப்ப ,என்ன தப்பு செய்கிறார் என்பது முக்கியமல்ல ,யார் தப்பு செய்கிறார் என்பது தான் முக்கியம் .அப்படித் தானே .இதைத் தட்டிக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஊடகங்கள் , கேள்வி கேட்பதற்கு பதிலாக அதிகாரவர்க்கத்தைப் பாராட்டவே செய்கின்றன .என்ன கொடுமை இது ? நீதி செத்துப்போன இடத்தில் ஊடகங்கள் மட்டும் உயிரோடவா இருக்கும் .
இந்தத் திருட்டுக்காக 5 பேர் கொல்லப்பட்டது .சந்தேகமே இல்லாமல் நம் சமூகத்தின் மீது விழுந்த அதிகாரத்தின் அடி !
அடுத்த தடவ பேருந்துல போகும் போது டிக்கெட் எடுக்க மறந்துடாதிங்க , ஏன்னா உங்களையும் என்கவுன்டர்ல போட்டாலும் போட்ருவாங்க !? சூதானமா இருங்க !

0 comments:
Post a Comment