
K.V.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் , T.R.ராஜகோபால் இசையமைப்பில் 1959 ஆம் ஆண்டு
வெளிவந்த " கண் திறந்தது " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல்
இடம்பெற்றுள்ளது .பட்டுக்கோட்டையாரின் எழுத்து வண்ணத்தில் உருவான இன்னுமொரு
சிறந்த பாடலிது .
அந்தப் பாடல் :
பாடல் வரிகள் :
ஒருகுறையும் செய்யாமே
ஒலகத்திலே யாருமில்லே _ அப்படி
உத்தமனாய் வாழந்தவனை _ இந்த ஒலகம்
ஒதைக்காம விட்டதில்லை…
இருக்கும் பொழுதை ரசிக்கணும் _ அட
இன்பமாகக் கழிக்கணும்
எதிலும் துணிஞ்சு இறங்கணும் _ நீ
ஏங்கி எதுக்குத் துடிக்கணும்? (இருக்…)
நாளை நாளை என்று பொன்னான
நாளைக் கெடுப்பவன் குருடன்
நடந்து போனதை நெனச்சு ஒடம்பு
நலிஞ்சு போறவன் மடையன் _ சுத்த மடையன்
நம்மைப்போல கெடச்சதைத் தின்னு
நெனச்சதைச் செய்யிறவன் மனுஷன் (இருக்…)
ஆடி ஓடிப் பொருளைத் தேடி…
அவனும் திங்காமே பதுக்கி வைப்பான்…
அதிலே இதிலே...