தமிழ் இசைக்கடலில் மூழ்கி தேட தேட முத்துக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கினறன. சமீபத்தில் கிடைத்த முத்து இந்தப் பாடல் .1972 ஆம் வருடம் வெளிவந்த "யார் ஜம்புலிங்கம் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . இசையமைத்து இந்தப்பாடலைப் பாடியவர் தமிழ் இசைச் சித்தர் என்றழைக்கப்படும் சி.எஸ்.ஜெயராமன் .இவர் ஆரம்ப கால தமிழ் சினிமாவின் தனித்துவமான பாடகர் . இந்தப் பாடலை யார் எழுதியது என்று தெரியவில்லை.
அந்தப் பாடல் :
பாடல் வரிகள் :
நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்
நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்
அது பொல்லாதவன் பையில் இருந்தால்
எல்லா உயிர்க்கும் பாதகம்
எல்லா உயிர்க்கும் பாதகம்
நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்
இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இறந்தும் இறவாதிருக்கின்றான்
இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இறந்தும் இறவாதிருக்கின்றான்
பணத்திமிர் கொண்ட மனிதர் நிமிர்ந்திருந்தாலும்
நடை பிணமாக நடக்கின்றான்
நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்
லட்சங்கள் முன்னே லச்சியமெல்லாம்
எச்சிலை போலே பறக்குமடா
அச்சடித்திருக்கும் காகித பெருமை
ஆண்டவனார்க்கும் இல்லையடா
ஆண்டவனார்க்கும் இல்லையடா
நல்லவன் கையில் நாணயம் இருந்தால்
நாலு பேருக்கு சாதகம்
ஓடும் உருலும்
ஓடும்
உருலும்
உலகம் தண்ணில்
தேடும் பொருளும் தேவைதான்
தேடும் பொருளும் தேவைதான்
அதில் மயக்கம் இல்லாமல் அடக்கம் இருந்தால்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்
"
லட்சங்கள் முன்னே லச்சியமெல்லாம்
எச்சிலை போலே பறக்குமடா
",
எது உயர்ந்த வாழ்க்கை என்பதற்கு சிறந்த விளக்கம் இந்த வரிகள்
,"
ஓடும்
உருலும்
உலகம் தண்ணில்
தேடும் பொருளும் தேவைதான்,
அதில் மயக்கம் இல்லாமல்
அடக்கம் இருந்தால்,
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்
"
மேலும் படிக்க :
எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ?
சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !
...................................................................................
1 comments:
சிறப்பான பாடல்களில் ஒன்று... நன்றி...
Post a Comment