Wednesday, December 31, 2014

புத்தகமும் திரைப்படமும் தான் எளிய எதிரிகளா ?

மதவாதிகளாலும் பிரிவினைவாதிகளாலும் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாவது புத்தகங்களும் திரைப்படங்களும் தான். கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மனநிலையை மதவாதிகள் பிரதிபளிக்கிறார்கள். அரசியல் ஆதாயத்திற்காக மக்களை பிளவுபடுத்துகிறார்கள். மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதைப் பற்றியோ , சாதாரண மக்களின் வளர்ச்சியைப் பற்றியோ  துளியும் கவலைப்படாதவர்கள் தான் மதத்திற்காக கொடிபிடிக்கிறார்கள். "மக்களுக்காக மதம் " என்பது போய் "மதத்திற்காக மக்கள்" என்றாகிவிட்டது தான் இன்றைய அவலம். புத்தகமாக இருந்தாலும் திரைப்படமாக இருந்தாலும் விமர்சனம் செய்யும் உரிமை எல்லோருக்கும் உண்டு. அதைவிட்டுவிட்டு புத்தகத்தை எரிப்பதையும் திரையரங்கங்களை தாக்குவதையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. எரிப்பதாலும் தாக்குவதாலும் புத்தகமும் திரைப்படமும் மறைமுக விளம்பரத்தையே பெருகின்றன. மதம்...

Saturday, December 6, 2014

ருத்ரய்யா - தனித்த படைப்பாளி !

ஒரே ஒரு படத்தால் ஒரு இயக்குனர் நீண்ட காலத்திற்கு பிறகும் கொண்டாடப்படுவாரா ? ஆம் கொண்டாடப்படுவார். ஆறுமுகம் என்ற இயற்பெயர் கொண்ட ருத்ரய்யாவை அப்படித்தான் கொண்டாடுகிறோம். இன்று ருத்ரய்யா நம்முடன் இல்லை . சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ருத்ரய்யா தனது 67வது வயதில் உடல்நலக் குறைவால் கடந்த நவம்பர் 18 அன்று நம்மை விட்டு பிரிந்தார். அவள் அப்படி தான் - தமிழ் சினிமா வரலாற்றின் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் . இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் தான் ருத்ரய்யா . இந்தத் திரைப்படம் குறித்து முன்பு எழுதிய பதிவு -  http://jselvaraj.blogspot.in/2013/06/blog-post_8.html . சினிமாத்துறையில் இருந்து கொண்டு கடைசிவரை சமரசமில்லாமல் வாழ்ந்த படைப்பாளி. இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 20-11-14 தமிழ் 'தி இந்து ' நாளிதழ் ஒரு முழு நடுப்பக்கத்தை ஒதுக்கியுள்ளது...

Tuesday, November 11, 2014

போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

கலாச்சாரம் என்பதை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குட்பட்ட மனிதர்களின் வாழ்வியல் முறை என்று சுருக்கமாக சொல்லலாம் . தனித்த உணவு ,உடை ,இருப்பிடம் ,மொழி ,சமய நம்பிக்கைகள் உள்ளிட்டவை வாழ்வியல் முறைக்குள் அடங்கும் . உலகெங்கிலும்  உள்ள இனக்குழுக்களால் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு  வந்த விதவிதமான கலாச்சாரங்கள் உலகமயமாக்கலின் விளைவாக கரையத் தொடங்கி நெடுநாட்களாகி விட்டன . அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த கலாச்சார வாழ்வியல் முறை இன்று உலகமயமாக்கல் தடம் பதித்துள்ள எந்த இடத்திலும் இல்லை . நாகரிகத்தின் பெயரால் ,வளர்ச்சியின் பெயரால் பாரம்பரிய விழுமியங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன . வளர்ச்சியின் வாடை படாத  பழங்குடி மக்களின் வாழ்வியல் முறை மட்டும் மாறாமல் இருக்கிறது .  காடுகளில் பயணம் செய்கிறோம் என்ற பெயரில் நகரத்து மக்கள் காடுகளில் நுழைவதால்...

Tuesday, October 21, 2014

டாஸ்மாக் அரக்கன் அழியும் நாளே !

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள்  நிரந்தரமாக மூடப்படும் தினமே தமிழ்நாட்டிற்கு உண்மையான தீபாவளி . அதுவரை தீபாவளி என்பது இயந்திர வாழ்விற்கு ஒரு நாள் ஓய்வு தரும் சாதாரண விடுமுறை நாள் அவ்வளவு  தான். 40% மக்கள் குடியால் நேரடியாகவோ ,மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட நிலையில் மதுபானக்கடைகள் என்னும் அரக்கன்  வதம் செய்யப்படும் நாளையே தீபாவளியாக கொண்டாடுவது தான் பொருத்தமாக இருக்கும் . மது ,மனித இனத்தின் தொடக்க காலத்திலிருந்தே மனிதனுடன் பயணித்து வருகிறது . ஆரம்பத்தில் கொண்டாட்டத்தின் பானமாக இருந்த மது, கால ஓட்டத்தில் பலவிதமான மாற்றங்களை அடைந்ததுடன் மட்டுமல்லாமல் தற்போது சமுக அமைப்பை பெருமளவு பாதிக்கும் காரணியாக உருவெடுத்துள்ளது . தமிழகத்தைப் பொருத்தவரை மது முன்பே சீரழிவை ஏற்படுத்தி இருந்தாலும் அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் தெருவுக்கு தெரு திறக்கப்பட்டதன்...

Tuesday, September 30, 2014

காகித மலர்கள் !

தமிழ்  இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமையான ஆதவனால் எழுதப்பட்டது தான் இந்த 'காகித மலர்கள் ' ( 1977 ) நாவல் . மனிதர்களின் மனப்போக்குகளை ,வேசங்களை இவ்வளவு நெருக்கமாக எழுத்தில் பதிவு பண்ண முடியுமா ? என்ற ஆச்சரியம் நாவல்  முழுமைக்கும் உள்ளது . ஆனால், இது சாத்தியம் என்றே நிரூபித்திருக்கிறார் ,ஆதவன் .ஆம் ,இவருக்கு மட்டுமே சாத்தியம் . 70 களில் டெல்லியில் வாழ்ந்த சில தமிழ்க் குடும்பங்கள்  எப்படி இருந்தன என்ற பிம்பத்தை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது .  நாகரிக வாழ்வு என்ற பெயரில் தனது சுயத்தை இழந்து விதவிதமான வேசங்கள் அணிவதன் மூலம் தன்னை திருப்திபடுத்த முயலும் கதாப்பாத்திரங்களை 'காகித மலர்கள் ' முன்வைக்கிறது . மனிதர்களின் சுயம் , தனித்துவம் , அணியும் பிம்பங்கள் பற்றி அதிகம் பேசும் இந்நாவல் இயற்கை குறித்தும் ,செயற்கை உரங்கள் மற்றும்...

Saturday, August 9, 2014

வலுத்தது நிலைக்கும் !

450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி என்று இன்று அழைக்கப்படுகிற கிரகம் 7927 மைல் விட்டமுள்ள மிதக்கும் பாறை .இந்தப்பாறையில் கடல்கள் உருவாக 100 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன.350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான் முதல் உயிரினம் தோன்றியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது . பூமியில் எவ்வாறு உயிரினம் தோன்றியது என்பது குறித்த ஆராய்ச்சி இன்று வரை தொடர்கிறது .சமீபத்தில் கூட சில ஆராய்ச்சியாளர்கள் ,செவ்வாய் கிரகத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு பாறை பூமியின் மீது மோதியதால் தான் உயிரினம் தோன்றியது என்று தெரிவித்துள்ளனர். இப்படித்தான் உயிரினம் தோன்றியது இதுவரை அழுத்தமாக யாராலும் சொல்ல முடியவில்லை .உண்மையான காரணம் இயற்கை மட்டுமே அறியும் . பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் முதலில் தோன்றின . Normal 0 false false false ...

Tuesday, July 22, 2014

மனிதம் எங்கே ?

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்தோம் , மியான்மரிலிருந்து முஸ்லீம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டபோதும் வேடிக்கை பார்த்தோம் , ஆப்பிரிக்க நாடுகளில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்தோம் , இப்போது , அறிவுலகில் பெரிய அறிவாளிகளாக பீனிக்ஸ் பறவைகளாக அடையாளம் காணப்படும் இஸ்ரேலியர்களின் நாடான இஸ்ரேலின் தாக்குதல்கள்களால் காஸா பகுதியிலுள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் .தெற்கு இஸ்ரேல் பகுதியிலுள்ள மக்கள் , காஸாவின் ஹமாஸ் தாக்குதல்களால் பாதிக்கப்படுகறார்கள் ; கொல்லப்படுகிறார்கள் . உலகெங்கிலுமே போரை நியாயப்படுத்தி அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் . ஏ ! போரை நியாயப்படுத்துபவர்களே உங்கள் போரை , உங்கள் சண்டையை மககள் பாதிக்காவண்ணம் போரைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாத அப்பாவி மக்களைக் கொல்லாமல் பாலைவனம் போன்ற...

Saturday, July 19, 2014

தனியழகு !

மின்கம்பிகளுக்கு தனியே அழகென்று ஏதுமில்லை பறவை(கள்) அமர்ந்த பிறகு தனியழகு !&nbs...

Monday, June 30, 2014

ரிமோட் கன்ரோல் வாழ்க்கை !

ரிமோட் கன்ரோல் செயல்பாடு மனித வாழ்வில் பெரும் பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது . இந்தப் பாதிப்பு நாம் உணரா வண்ணம் நிகழ்ந்துள்ளது. ரிமோட் கன்ரோலைப் பயன்படுத்தாமலே   தொலைக்காட்சி பார்த்தோம், கார் ஓட்டினோம் , வீட்டில் வாழ்ந்தோம் இன்னும் பல வேலைகள் செய்தோம் . அப்போதும் ஒரு வாழ்க்கை வாழ்ந்தோம் . ரிமோட் கன்ரோலைப் பல்வேறு விதங்களில் பயன்படுத்திக் கொண்டும் ஒரு வாழ்க்கை வாழ்கிறோம் .என்ன வித்தியாசம் ? நாம் இயக்க நினைக்கும் பொருட்களை தொலைவிலிருந்தே உடனடியாக இயக்க ரிமோட் கன்ரோல் பயன்படுகிறது. நமது நேரத்தை மிச்சப்படுத்திய ஒரு கண்டுபிடிப்பாக இருந்தாலும் ஒரு விதத்தில் நம்மை சோம்பேறியாகவும் மாற்றிவிட்டது . விசயம் அதுவல்ல. இந்த ரிமோட் கன்ரோல் செயல்பாடு நம் வாழ்வை எவ்வாறு பாதித்துள்ளது என்பது சற்றே அதிர்ச்சி தரும் விசயம். நாம் பயன்படுத்தும் பலவிதமான ரிமோட்களில்...

Friday, May 23, 2014

எது வளர்ச்சி ?

எங்க பார்த்தாலும் வளர்ச்சி வளர்ச்சினே பேசிக்கிறாங்க . தனி மனித வளர்ச்சி , கிராம நகர வளர்ச்சி , பொருளாதார வளர்ச்சி ,நாட்டின் வளர்ச்சி , உலகின் வளர்ச்சினு பலவிதமான வளர்ச்சி பற்றி பலரும் வகுப்பெடுக்கறாங்க . உலகமயமாக்கல், இந்த வளர்ச்சின்ற பேர சொல்லிக்கிட்டு தான் உலகெங்கும் கிளை பரப்புகிறது. உண்மையில் உலகமயமாக்கலால் வளர்ந்ததை விட அழிந்ததே அதிகம். அப்படியென்றால் வளர்ச்சியை எப்படி நிர்ணயம் செய்வது ? வளர்ச்சியின் உண்மையான பொருள் இயற்கையிடமிருக்கிறது. இயற்கையில் வளர்ச்சி என்பது அழிவால் வருவதில்லை. அழிவு இருந்தாலும் ஒரு கட்டுப்பாடான சமநிலை இயற்கையில் பேணப்படுகிறது. அளவுக்கு மீறிய வளர்ச்சியையும் , உடனடியான வளர்ச்சியையும் இயற்கை ஒருபோதும் ஆதரிப்பதில்லை . இன்றைய நவீன வளர்ச்சி என்பது அளவுக்கு மீறிய வளர்ச்சியையும் , உடனடியான வளர்ச்சியையும் நோக்கி மனிதனைத்...

Wednesday, April 30, 2014

ஆம் ஆத்மியின் குரல் !

நடந்து முடிந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியின் குரல் ,லஞ்சம் , ஊழலுக்கு எதிரான குரலா ? அல்லது மாற்றத்திற்கான குரலா ? தெரியவில்லை. மக்களுக்காகப் போராடும் களப்போராளிகள் அதிகம்பேர் பங்குபெற்ற தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கிறது. இத்தனை பேரையும் நேரடியாக அரசியலில் பங்கு பெற வைத்தது நிச்சயமாக ஆம் ஆத்மியின் சாதனை தான். ஆம் ஆத்மியின் வேட்பாளர் தேர்வு மிகவும் வெளிப்படையாகவே உள்ளது. தமிழகத்தில் ஆம் ஆத்மி சார்பில் 25 வேட்பாளர்கள் என்பது ஆச்சரியம் தான். வெளியில் மதசார்பற்றவர்கள் போல் காட்டிக் கொண்டு சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது தான் மாநில , தேசிய அளவிளான அரசியல் கட்சிகளின் பொது புத்தி . ஆம் ஆத்மி இவ்வாறு இல்லை என்பது சற்றே ஆறுதல் தருகிறது. ஒரு தேசிய கட்சியாக நாடு முழுவதும் களமிறங்கியிருக்கும் ஆம் ஆத்மியின்...

Saturday, March 22, 2014

விவசாயமும் கிராமமும் தொலைக்காட்சியும் !

விவசாயம்,விவசாயி குறித்து யாரும் எந்த நிகழ்ச்சியும் தயாரிக்கவோ ,ஒளிபரப்பவோ முன்வருவதில்லை. வெள்ளித்திரை, சின்னத்திரை மனிதர்கள் மட்டுமே பல்வேறு விதமான நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்றனர். இதுவும் ஒருவிதமான தீண்டாமை தான்.இன்றைய சமூகத்தில் மிகப்பெரிய தீண்டாமையைச் சந்திப்பது விவசாயமும், விவசாயியும் தான். "தன் மகன்(ள்) ஒரு விவசாயி ஆக இருப்பதில் தான் பெருமை " என்று பெற்றோர்கள் நினைக்கும் நிலை உருவாகும் வரை விவசாயம் என்பது தீண்டத்தகாததாகவே இருக்கும் . இதை மாற்ற வேண்டியது யாருடைய கடமை? சமூகத்தின் பிரதிபளிப்பு தான் சினிமா என்றால் 70 % திரைப்படங்கள் விவசாயம் குறித்தோ அல்லது விவசாயம் சார்ந்த தொழில்கள் குறித்தோ , அதில் ஈடுபடும் மனிதர்கள் குறித்தோ இருக்க வேண்டும் . ஆனால், இங்கு, விதவிதமான காதல்கள் தவிர தமிழ் சினிமாவில் என்ன இருக்கிறது.  இந்தியாவின்...

Wednesday, February 19, 2014

தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் !

இந்திய கிரிக்கெட் வரலாறு இரண்டு இடங்களில் தோனியின் பெயரை அழுத்தமாக பதிவு செய்யும் . ஒன்று , அனைத்து சர்வதேச கோப்பைகளையும் வென்ற இந்தியாவின் சிறந்த அணித்தலைவர் .இரண்டு ,தனி ஒரு நாட்டுக்கு எதிரான வெளிநாட்டுப் பயணங்களில் மோசமான தோல்விகளை அதிகளவு  சந்தித்த இந்தியாவின் அணித்தலைவர் . இந்திய கிரிக்கெட் அணி , 1970 களில் கத்துக்குட்டி அணியாக சர்வதேச போட்டிகளில்  விளையாடி மோசமான தோல்விகளை சந்தித்த போது  அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . வளரும் அணி தொடர்ந்து தோற்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது . அந்த அணி வெற்றி பெற முயற்சிப்பதே சாதனையாக பார்க்கப் படுகிறது . ஒரு நாள் போட்டியில் சாம்பியன் , டெஸ்ட் மற்றும் 20-20 போட்டிகளில் உலகத்  தரவரிசையில் இரண்டாம்...

Wednesday, January 22, 2014

K.A.தங்கவேலுவின் நகைச்சுவை !

  தமிழ் திரைப்பட வரலாற்றில் அன்று முதல் இன்று வரை  கதாநாயகனுக்கு நண்பனாக ஒரு நகைச்சுவை நடிகர் தான் நடிக்கிறார் .ஏன்? தெரியவில்லை . கதாநாயகனை ஒப்பந்தம் செய்தவுடன் நகைச்சுவை நடிகரைத் தான் ஒப்பந்தம் செய்கிறார்கள் .ஜெமினி கணேசனின் நண்பனாக பல படங்களில் தங்கவேலு நடித்துள்ளார்.  அம்பிகாபதி -தங்கவேலு , நகைச்சுவை நடிகர் கருணாநிதியுடன் ( வெங்காய புலவர் ) இணைந்து நாய் வாலை நிமிர்த்த முயற்சி செய்யும் நகைச்சுவை அசரடிக்கும்.முழுப் படத்தையும் பார்க்க. கல்யாண பரிசு - " மன்னார் அன் கம்பெனி " யை மறக்க முடியுமா ? மன்னார் அன் கம்பெனியின் மேனேஜர் என்று பொய் சொல்லிக் கொண்டு இவர் பண்ணும் அலப்பரை அருமை .K.A.தங்கவேலுவிற்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்த படம் .   கைதி கண்ணாயிரம்-இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகன் அளவிற்கு...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms