
1956 ஆம் ஆண்டு வெளிவந்த பாசவலை திரைப்படம் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது . இத்திரைப்படத்தில் 5 பாடல்களை பட்டுக்கோட்டையார் எழுதினார் . அதில் இந்தப் பாடலும் ( உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்...) ஒன்று. இந்தப் பாடலில் இடம்பெற்ற வரிகளைப் பார்த்துவிட்டு வயதான ஒருவர் தான் எழுதியிருப்பார் என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால் இப்பாடல் வெளிவந்த போது கல்யாணசுந்தரத்தின் வயது 26 தான் . இளவயதிலேயே அவர் செய்த வேலைகளும் அதிகம் ,சந்தித்த சோதனைகளும் அதிகம் . இந்த அனுபவமே அவரது பாடல் வரிகளில் தத்துவக் கருத்துகள் நிரம்பியிருக்கக் காரணம் .
அந்தப் பாடல் :
பாடல் வரிகள் :
குட்டிஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி
மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட...