
தமிழ் கூறும்
நல்லுலகம் எந்தக் கலைஞரையும் அவர் வாழ்கின்ற காலத்தில் கொண்டாடியதில்லை. அதற்கு
எஸ்.ஜானகியும் விதிவிலக்கில்லை. ஆனாலும் எஸ்.ஜானகியைக் கொண்டாட நமக்கு இன்னமும்
வாய்ப்பிருக்கிறது. 1957 ஆம் ஆண்டிலிருந்து எஸ்.ஜானகி தமிழ் மொழியில்
பாடிவருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம்,
சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கனி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன்,
படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் 20,000 கும் மேற்பட்ட பாடல்களைப்
பாடியிருக்கிறார். தற்போது அதிக எண்ணிக்கையில் பாடவில்லையென்றாலும் 77 வயதிலும்
ஒருவரால் குரல் நடுக்கமில்லாமல் பாட முடிவதென்பதே பெரிய சாதனை தான்.
1958-ல்
எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் வெளிவந்த ‘ கொஞ்சும் சலங்கை ’
திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ சிங்கார வேலனே தேவா... ’ என்ற பாடல்...