Monday, December 3, 2018

இதிலென்ன இருக்கு பேசுவோம் -7 !

காமம் என்ற வார்த்தையே இங்கு தவறாகத்தான் பார்க்கப்படுகிறது , தவறாகத்தான் புரிந்து கொள்ளப்படுகிறது. ஒதுக்கி ஒதுக்கியே காமத்தை இயல்பில்லாத ஒன்றாக நினைக்கப் பழகி விட்டோம். மற்ற உயிரினங்களில் எப்படியோ தெரியாது. ஆனால் மனித இனத்தில் காமம் முக்கிய பங்கு வகிக்கிறது. காமமே நம்மை வழிநடத்துகிறது.மனித இனத்தில் பெண் இல்லாத உலகமும் சாத்தியமில்லை , ஆண் இல்லாத உலகமும் சாத்தியமில்லை.அதே போல காமம் இல்லாத மனித இனமும் சாத்தியமில்லை. காமத்தைப் பொறுத்தவரை எல்லா மனிதர்களும் சமமில்லை என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. கைரேகை போலவே ஒவ்வொருவரின் காமமும் தனித்துவமானது. அதுவே புரிந்து கொள்வதில் சிக்கலாகவும் மாறிவிடுகிறது. குழந்தைகளாக இருக்கும்போது பாலின பேதமில்லாமல் விளையாடுகிறோம். பாலுறுப்புகள் மூலம் ஆண் ,பெண் என்ற பேதம் தெரிய வருகிறது. பல்வேறுவிதமான விளையாட்டுகளின்...

Monday, September 3, 2018

இதிலென்ன இருக்கு பேசுவோம் -6 !

'ஒருவனுக்கு ஒருத்தி ' என்பது ஒரு போலியான கற்பிதம். சமூகத்தில் நிகழும் பல்வேறு விதமான பாலியல் சிக்கல்களுக்கு இந்த சித்தாந்தமும் ஒரு முக்கியமான காரணம். இதனாலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்று சொல்லி பெண்களை கட்டுப்படுத்தும் சமூகம் ஆண்களை எதுவும் சொல்வதில்லை. ஆணிற்கும் , பெண்ணிற்கும் மறைமுக கட்டுபாட்டையும் , நெருக்கடியையும், சுதந்திரமின்மையையும் இந்த 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்பது உருவாக்குகிறது. திருமணம் என்பதே, இனி இந்த ஆணும் இந்த பெண்ணும் 'ஒருவனுக்கு ஒருத்தி'யாக வாழப் போகிறார்கள் என்பதை எல்லோருக்கும் அறிவிக்கும் ஒரு நிகழ்வாகவே இருக்கிறது.அதன் பிறகு மீறல் நிகழாமல் இருக்கும் வகையில் அவர்களை  சமூகம் கண்காணிக்கிறது. ஆனாலும் அங்கே மீறல்கள் நிகழ்கின்றன. மனப்பொருத்தம் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது....

Saturday, July 21, 2018

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 5 !

" மனித சமூகத்துக்கு முதலில் மிக வேகமாக, வயித்துக்கு சோறு நிறைவாகக் கிடைக்கிறதா. அடுத்து , ஆணும் பெண்ணும் பாலியல் பசி இல்லாமல், சிக்கல் இல்லாமல் நிறைவாக இருக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த இரண்டையும் ஏற்படுத்தித் தந்துவிட்டு அதன் பிறகு ஒழுக்கத்தை வற்புறுத்தினால் அர்த்தம் உண்டு. வயித்துப் பசி ஒரு கொடூரம். பாலியல் பசி அதைவிடக் கொடூரம் " - கி.ராஜநாராயணன். தமிழக சூழலில் பாலியலை, தான் சேகரித்த பாலியல் கதைகளின் வாயிலாக மிகச்சரியாக முன்வைத்த படைப்பாளியாக கி.ராஜநாராயணன் அவர்களைக் கூறலாம்.பாலியலை சார்பில்லாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைத்தவர். இந்த புரிதல் ஏற்பட அவர் சேகரித்த கதைகளும் உதவியிருக்கலாம். யோசித்துப்  பார்த்தோமேயானால் நாட்டில் நிகழும் சமூகக் குற்றங்களுக்கு வயித்துப்பசியும் , பாலியல் பசியும் தான் முக்கிய காரணங்களாக...

Tuesday, February 13, 2018

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !

மனித வாழ்வில் இந்த பதினான்கு வயதிலிருந்து இருபது வரையிலான பதின் பருவம் (டீன் ஏஜ் ) என்பது எப்போதும் புதிர் நிரம்பியதாகவே இருக்கிறது. சுய சந்தேகங்கள் அதிகமாக தோன்றுகின்றன.  உடலளவிலும், மனதளவிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்பட குடும்பங்களும் தயாராக இல்லை , சமூகமும் தயாராக இல்லை. ஆனால் அவர்களைப் பற்றி ஆயிரத்தெட்டு குறைகள் சொல்ல மட்டும் எப்போதும் தயாராக இருக்கின்றன குடும்பங்களும் , சமூகமும். பெரும்பாலும் இந்த வயதுகளில் தான் நல்ல பழக்கங்கள் , தீய பழக்கங்கள் என வரையறை செய்பவை குடிகொள்கின்றன.பிற்காலத்தில் இந்த பழக்கங்கள் அவ்வளவு எளிதாக விட்டு விலகுவதில்லை. அதனால் தான் இந்த பருவம் முக்கியமானதாகிறது.  உடலளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஹார்மோன்கள் எனப்படும் ரசாயனங்கள் காரணமாக இருக்கின்றன....

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms