
காமம் என்ற வார்த்தையே இங்கு தவறாகத்தான் பார்க்கப்படுகிறது , தவறாகத்தான் புரிந்து கொள்ளப்படுகிறது. ஒதுக்கி ஒதுக்கியே காமத்தை இயல்பில்லாத ஒன்றாக நினைக்கப் பழகி விட்டோம். மற்ற உயிரினங்களில் எப்படியோ தெரியாது. ஆனால் மனித இனத்தில் காமம் முக்கிய பங்கு வகிக்கிறது. காமமே நம்மை வழிநடத்துகிறது.மனித இனத்தில் பெண் இல்லாத உலகமும் சாத்தியமில்லை , ஆண் இல்லாத உலகமும் சாத்தியமில்லை.அதே போல காமம் இல்லாத மனித இனமும் சாத்தியமில்லை.
காமத்தைப் பொறுத்தவரை எல்லா மனிதர்களும் சமமில்லை என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. கைரேகை போலவே ஒவ்வொருவரின் காமமும் தனித்துவமானது. அதுவே புரிந்து கொள்வதில் சிக்கலாகவும் மாறிவிடுகிறது. குழந்தைகளாக இருக்கும்போது பாலின பேதமில்லாமல் விளையாடுகிறோம். பாலுறுப்புகள் மூலம் ஆண் ,பெண் என்ற பேதம் தெரிய வருகிறது. பல்வேறுவிதமான விளையாட்டுகளின்...