
அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் ( https://clc.gov.in/clc/node/606 )கூட இன்னமும் தொழிலாளர்களுக்கு சென்றடையவில்லை. சமூகநீதி காக்கும் மண் என்று சொல்லிக்கொள்ளும் தமிழகத்தில் கூட இது தான் நிலைமை. 1990 வரை வலுவாக இயங்கி வந்த தொழிற்சங்கங்கள் அதன் பிறகு வலுவிழக்கத் தொடங்கி விட்டன. காரணம், 1990க்கு பிறகு தான் கார்பரேட் வணிகம் விரிவடைய ஆரம்பித்தது தான். கார்பரேட்களுக்காக தொழிலாளர் சட்டங்களும் திருத்தப்படுகின்றன, தொழிற்சங்கங்களும் அழிக்கப்படுகின்றன.
இன்றைய சூழலில் அரசு ஊழியர்களின் சங்கங்கள் மட்டுமே ஓரளவு வலுவுடன் இருக்கின்றன. அப்படி இருந்தும் கூட மத்திய,மாநில அரசுகளை தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்பந்திக்க முடியவில்லை. இந்நிலையில் பெரும்பாலான தனியார் ஊழியர்களுக்கு தொழிற்சங்கங்கள் இல்லை. ஏற்கனவே இருக்கும் தொழிற்சங்கங்களும்...